
வடக்கு காஷ்மீர் பாரமுல்லா மாவட்டத்தின் எல்லை நகரமான உரியில் உள்ள கோஹலன் பகுதியில் நேற்றுமுன்தினம் இரவு ராணுவ வீரர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு இருந்தனர். அப்போது ராணுவ வீரர் ரக்ஷித் குமார் என்பவர் திடீரென தனது துப்பாக்கியால் தனது உடலில் சுட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இதை பார்த்து மற்ற ராணுவ வீரர்கள் அதிர்ச்சி அடைந்தனர். தற்கொலை செய்த கொண்ட ரக்ஷித் குமார் ஜம்முவின் சம்பா பகுதியை சேர்ந்தவர். என்ன காரணத்துக்காக இந்த விபரீத முடிவை எடுத்தார் என்பது தெரியவில்லை.