என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
மம்தா பானர்ஜியை கட்டிப்பிடிப்பதாக மிரட்டிய பாஜக தலைவருக்கு கொரோனா பாதிப்பு
Byமாலை மலர்2 Oct 2020 9:54 AM GMT (Updated: 2 Oct 2020 9:54 AM GMT)
கொரோனா பாதிப்பு ஏற்பட்டால் மம்தா பானர்ஜியை கட்டிப்பிடிப்பதாக பேசி சர்ச்சையில் சிக்கிய பாஜக தலைவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
கொல்கத்தா:
பாஜக தேசிய செயலாளராக சமீபத்தில் நியமிக்கப்பட்ட அனுபம் ஹஸ்ரா, மேற்கு வங்க மாநிலம் தெற்கு 24 பர்கானாஸ் மாவட்டத்தில் நடைபெற்ற கட்சி நிகழ்ச்சியில் கூறிய கருத்து சர்ச்சையை ஏற்படுத்தியது.
அந்த நிகழ்ச்சியில் அனுபம் ஹஸ்ரா பேசும்போது, ‘எங்கள் தொண்டர்கள் கொரோனாவை விட ஒரு பெரிய எதிரியுடன் போராடுகிறார்கள். அவர்கள் மம்தா பானர்ஜியுடன் போராடுகிறார்கள். நான் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டால், நான் சென்று முதல்வர் மம்தா பானர்ஜியை கட்டிப்பிடிக்கலாம் என்று முடிவு செய்துள்ளேன்” என்றார்.
இந்த பேச்சு மம்தாவின் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியினரிடையே கடும் கோபத்தை உண்டாக்கியது. இதுபற்றி போலீசிலும் புகார் அளிக்கப்பட்டது.
இந்நிலையில், உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்ட அனுபம் ஹஸ்ரா, கொல்கத்தாவில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அவருக்கு நடத்தப்பட்ட கொரோனா பரிசோதனையில் அவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
Next Story
×