search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    தூய்மை இந்தியா விருதுகள் வழங்கும் விழா
    X
    தூய்மை இந்தியா விருதுகள் வழங்கும் விழா

    தூய்மை இந்தியா விருதுகள்- காணொளி வாயிலாக வழங்கிய மத்திய மந்திரி

    தூய்மை இந்தியா திட்டத்தை சிறப்பாக செயல்படுத்தியமைக்காக திருநெல்வேலி மாவட்டத்திற்கு விருது வழங்கப்பட்டுள்ளது.
    புதுடெல்லி:

    மோடி தலைமையிலான பாஜக ஆட்சி பொறுப்பேற்றதும் தூய்மை இந்தியா என்ற திட்டத்தை பிரதமர் மோடி கொண்டு வந்தார். பிரதமர் முதல் அமைச்சர்கள், எம்பிக்கள், எம்.எல்.க்கள் ஆகியோர் தூய்மை இந்தியா குறித்த விழிப்புணர்வை மக்களுக்கு ஏற்படுத்தினர். ஒவ்வொரு மாநிலத்தில் இருந்தும் பிரபலங்கள் தேர்வு செய்யப்பட்டு தூய்மை இந்தியா திட்ட தூதர்களாக நியமிக்கப்பட்டனர். 

    அதேசமயம் தூய்மை இந்தியா திட்டத்தை சிறப்பாக செயல்படுத்தும் மாநிலங்கள், மாவட்டங்கள், தாலுகாக்கள் மற்றும் கிராம பஞ்சாயத்துக்களுக்கு விருதுகள் வழங்கப்படுகின்றன. அவ்வகையில் இந்த ஆண்டுக்கான தூய்மை இந்தியா விருதுகள் இன்று வழங்கப்பட்டன. காணொளி வாயிலாக நடந்த நிகழ்ச்சியில், மத்திய ஜல் சக்தி துறை மந்திரி கஜேந்திர சிங் ஷெகாவத் விருதுகளை வழங்கினார்.

    மாநில அளவில் குஜராத் மாநிலத்திற்கும், மாவட்ட அளவில் தமிழகத்தின் திருநெல்வேலி மாவட்டத்திற்கும் விருது வழங்கப்பட்டது. தாலுகா அளவிலான விருது மத்திய பிரதேசத்தின் உஜ்ஜைன் மாவட்டம் கச்ராடு தாலுகாவிற்கும், கிராம பஞ்சாயத்து அளவிலான விருது தமிழகத்தின் சின்னனூர் கிராமத்திற்கும் வழங்கப்பட்டது.
    Next Story
    ×