search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    வைரல் புகைப்படம்
    X
    வைரல் புகைப்படம்

    ஹத்ராஸ் சம்பவத்தில் பாதிக்கப்பட்டவர் என கூறி வைரலாகும் புகைப்படம்

    ஹத்ராஸ் சம்பவத்தில் பாதிக்கப்பட்ட பெண் என கூறி இளம்பெண் ஒருவரின் புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

    உத்தர பிரதேச மாநிலம் ஹத்ராஸ் மாவட்டத்தைச் சேர்ந்த ஒரு இளம்பெண், கடந்த 14-ம் தேதி கொடூர கும்பலால் கூட்டு பலாத்காரம் செய்யப்பட்டு, கடுமையாக தாக்கப்பட்டார். 

    இளம்பெண்ணின் கழுத்து பகுதியில் கடுமையான பாதிப்புகள் ஏற்பட்டு உயிருக்கு ஆபத்தான நிலையில் மீட்கப்பட்ட அந்தப் பெண் டெல்லி சப்தர்ஜங் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இந்த கொடூர செயலில் ஈடுபட்ட 4 பேரை உத்தரபிரதேச போலீசார் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர். 

     வைரல் பதிவு ஸ்கிரீன்ஷாட்

    அவர்கள் மீது கொலை வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த கொடூர செயலில் ஈடுபட்டவர்களை உடனடியாக தூக்கிலிடவேண்டும் என்ற கோரிக்கை வலுத்து வருகிறது.

    இந்நிலையில், கொடூர சம்பவத்தில் பாதிக்கப்பட்ட பெண் என கூறி இளம்பெண் ஒருவரின் புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. எனினும், வைரல் புகைப்படத்தில் இருப்பது பாதிக்கப்பட்ட பெண் இல்லை என தெரியவந்துள்ளது.

    வைரல் புகைப்படத்தை பாதிக்கப்பட்ட பெண்ணின் சகோததர் பார்த்து, அதில் இருப்பது தனது சகோதரி இல்லை என தெரிவித்து இருக்கிறார். வைரல் புகைப்படத்தில் இருக்கும் பெண் 2018 ஆம் ஆண்டு உடல்நிலை பாதிக்கப்பட்டு  உயிரிழந்தார். 

    போலி செய்திகளை பரப்பாதீர்கள். போலி செய்திகளால் பல்வேறு பாதிப்புகள் ஏற்படுகின்றன. சமயங்களில் போலி செய்தி பாதிப்பு காரணமாக உயிரிழப்புகளும் ஏற்பட்டு இருக்கின்றன.
    Next Story
    ×