search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ப சிதம்பரம்
    X
    ப சிதம்பரம்

    இன்னொரு நமஸ்தே டிரம்ப் நிகழ்ச்சியை மோடி நடத்துவாரா? -ப.சிதம்பரம் விமர்சனம்

    கொரோனா உயிரிழப்புகளை மறைப்பதாக இந்தியா, சீனா மற்றும் ரஷியா ஆகிய நாடுகள் மீது டிரம்ப் குற்றம்சாட்டி உள்ளார்.
    புதுடெல்லி:

    இந்தியாவை நட்பு நாடு என்று கூறி வந்த அமெரிக்க அதிபர் டிரம்ப், பிரச்சாரத்தின்போது புவி வெப்பமடைதலுக்கு இந்தியா தான் காரணம் என்று குற்றம் சாட்டினார். இதேபோல் சீனா, ரஷியா ஆகிய நாடுகளும் காற்றில் மாசுக்களை பறக்க விடுவதாக கூறினார்.

    இதுபற்றி முன்னாள் மத்திய மந்திரி ப.சிதம்பரம் கூறியிருப்பதாவது:-

    47 ஆண்டுகளில் நீங்கள் செய்ததை விட 47 மாதங்களில் நான் செய்துள்ளேன் என்று அமெரிக்க அதிபர் தேர்தல் நேரடி விவாதத்தின்போது டொனால்ட் டிரம்ப் கூறி உள்ளார். இந்த அறிக்கை இந்தியாவில் உள்ள ஒருவரை உங்களுக்கு நினைவூட்டினால், அது உங்கள் கற்பனை!

    கொரோனா உயிரிழப்புகளை மறைப்பதாக இந்தியா, சீனா மற்றும் ரஷியா ஆகிய நாடுகள் மீது டிரம்ப் குற்றம்சாட்டி உள்ளார். அதிக அளவில் காற்று மாசுக்கு இந்த நாடுகள் காரணம் என்றும் டிரம்ப் கூறி உள்ளார்.

    இந்த சூழ்நிலையில், மோடி அவர்கள் தனது உற்ற நண்பரை கவுரவிப்பதற்காக இன்னொரு ‘நமஸ்தே டிரம்ப்!’ நிகழ்ச்சியை நடத்துவாரா?

    இவ்வாறு ப.சிதம்பரம் கூறி உள்ளார்.



    Next Story
    ×