search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கர்நாடக சட்டசபை எதிர்க்கட்சித் தலைவர் சித்தராமையா
    X
    கர்நாடக சட்டசபை எதிர்க்கட்சித் தலைவர் சித்தராமையா

    சட்டசபை இடைத்தேர்தலில் காங்கிரஸ் தனித்து போட்டி - சித்தராமையா அறிவிப்பு

    கர்நாடக சட்டசபை இடைத்தேர்தலில் காங்கிரஸ் தனித்து போட்டியிடப்போவதாக கர்நாடக சட்டசபை எதிர்க்கட்சித் தலைவர் சித்தராமையா தெரிவித்தார்.
    பெங்களூரு:

    கர்நாடக சட்டசபையில் காலியாக உள்ள சிரா, ராஜராஜேஸ்வரி நகர் ஆகிய தொகுதிகளுக்கு வருகிற நவம்பர் 3-ந் தேதி இடைத்தேர்தல் நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் நேற்று முன்தினம் அறிவித்தது. இதையொட்டி அரசியல் கட்சிகள் இடைத் தேர்தலை சந்திக்க தீவிரமாக தயாராகி வருகின்றன. இந்த நிலையில் கர்நாடக சட்டசபை எதிர்க்கட்சித் தலைவர் சித்தராமையா பெங்களூருவில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில் கூறியதாவது:-

    கர்நாடக சட்டசபையில் காலியாக உள்ள சிரா மற்றும் ராஜராஜேஸ்வரி நகர் ஆகிய தொகுதிகளுக்கு நவம்பர் 3-ந்தேதி இடைத்தேர்தல் நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. இந்த தேர்தலில் சிரா தொகுதியில் எங்கள் கட்சி சார்பில் முன்னாள் மந்திரி ஜெயச்சந்திரா போட்டியிடுவார். இந்த இடைத்தேர்தல் பொறுத்தவரையில் காங்கிரஸ் தனித்து போட்டியிடும்.

    ஜனதாதளம் (எஸ்) கட்சியுடன் கூட்டணி வைத்துக்கொள்ள மாட்டோம். இந்த இடைத்தேர்தலில் காங்கிரஸ் கட்சி வெற்றிபெறும் என்ற நம்பிக்கை உள்ளது. அதற்காக நாங்கள் கட்சியில் அனைவரும் ஒற்றுமையாக தேர்தல் பணியாற்ற திட்டமிட்டு உள்ளோம். எங்கள் கட்சிக்கு பலம் உள்ளது. மேலும் எங்கள் கட்சியில் வேட்பாளர்களுக்கு பஞ்சமில்லை.

    இவ்வாறு சித்தராமையா கூறினார்.
    Next Story
    ×