search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கச்சா எண்ணெய்
    X
    கச்சா எண்ணெய்

    வெளிநாடுகளில் கச்சா எண்ணெய்யை சேமித்து வைக்க இந்தியா முடிவு

    வெளிநாடுகளிலும் கச்சா எண்ணெய்யை சேமித்து வைப்பது குறித்து மத்திய அரசு பரிசீலித்து வருகிறது என மத்திய பெட்ரோலியத்துறை மந்திரி தர்மேந்திர பிரதான் தெரிவித்துள்ளா்.

    புதுடெல்லி:

    சுய சார்பு எரிசக்தி பாதுகாப்பு என்ற தலைப்பில் மாநாடு டெல்லியில் நடந்தது. இதில் மத்திய பெட்ரோலியத்துறை மந்திரி தர்மேந்திர பிரதான் பேசியதாவது:-

    உலகில் மூன்றாவது பெரிய கச்சா எண்ணெய்யை இறக்குமதியாளராக இந்தியா இருந்து வருகிறது. 80 சதவீதம் இறக்குமதி மூலமே நமது நாட்டில் கச்சா எண்ணெய் தேவை பூர்த்தி செய்யப்படுகிறது.

    கடந்த நிதியாண்டில் வெளிநாடுகளில் இருந்து 101.4 மில்லியன் டன் கச்சா எண்ணெய்யை இறக்குமதி செய்யப்பட்டது.

    இதில் 3-ல் 2 பங்கு கச்சா எண்ணெயை மத்திய கிழக்கு நாடுகளான ஈராக், சவுதி அரேபியா ஆகிய நாடுகளில் இருந்து பெறப்பட்டது. மேலும் ஆப்பிரிக்கா, வட அமெரிக்கா, தென் அமெரிக்கா நாடுகளில் தென் கிழக்கு ஆசிய நாடுகள் உள்பட 30 நாடுகளில் இருந்து கச்சா எண்ணெய்யை இறக்குமதி செய்யப்படுகிறது.

    நீண்ட கால அடிப்படையில் கச்சா எண்ணெய்யை இறக்குமதி செய்ய அமெரிக்கா, ரஷியா, அங்கோலா ஆகிய நாடுகளுடன் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது.

    மேலும் அவசர தேவைவை பூர்த்தி செய்வதற்காக அமெரிக்காவிலும், வணிக ரீதியில் சாத்தியமான பிற வெளிநாடுகளிலும் கச்சா எண்ணெய்யை சேமித்து வைப்பது குறித்து மத்திய அரசு பரிசீலித்து வருகிறது.

    மேலும் கத்தார் நாடு நமக்கு வழக்கமாக திரவ நிலையிலான எரிவாயு விநியோகம் செய்து வருகிறது. அத்துடன் அமெரிக்கா, ஆஸ்திரேலியா, ரஷியா ஆகிய நாடுகளிலிருந்தும் எரிவாயு இறக்குமதி செய்யப்படுகிறது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    Next Story
    ×