search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    சஞ்சய் ராவத்
    X
    சஞ்சய் ராவத்

    மகாராஷ்டிரா அரசு 5 ஆண்டு கால ஆட்சியை நிறைவு செய்யும்: சஞ்சய் ராவத்

    இடைத்தேர்தல் வராது, மகாராஷ்டிரா அரசு 5 ஆண்டு கால ஆட்சியை நிறைவு செய்யும் என சிவசேனா எம்.பி. சஞ்சய் ராவத் நம்பிக்கை தெரிவித்து உள்ளார்.
    மும்பை :

    மாநில பா.ஜனதா தலைவர் சந்திரகாந்த் பாட்டீல் மகாராஷ்டிராவில் இடைத்தேர்தல் நடக்க வாய்ப்பு இருப்பது போன்ற கருத்தை தெரிவித்து இருந்தார்.

    இது குறித்து அவர் கூறுகையில், “யாரும் இடைத்தேர்தலை விரும்பவில்லை. ஆனால் நிலையற்ற தன்மைக்கு ஒருவராலும் தீர்வை காண முடியாது. எனவே நல்ல காலை பொழுதில் எதாவது நடக்கலாம். அதே நேரத்தில் கூட்டணியும் ஒத்துவரவில்லையென்றால், அதை தவிர வேறு வழியில்லை” என கூறியிருந்தார்.

    இதற்கு பதில் அளித்து பேசிய சிவசேனா எம்.பி. சஞ்சய் ராவத் கூறியதாவது:-

    மகாராஷ்டிரா மக்கள் இடைத்தேர்தலை விரும்பில்லை. நானும் கூறுகிறேன், எந்த தேர்தலும் நடக்கப்போவதுமில்லை. அதேபோல தாக்கரே அரசு 5 ஆண்டுகள் செயல்படும். எந்த தேர்தலும் நடக்காது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    சாம்னாவில் பேட்டி எடுப்பது தொடர்பாக சஞ்சய் ராவத் கடந்த சில நாட்களுக்கு முன் பா.ஜனதாவை சேர்ந்த முன்னாள் முதல்-மந்திரி தேவேந்திர பட்னாவிசை சந்தித்து பேசியது மகாராஷ்டிரா அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது. இந்தநிலையில் சிவசேனா மாநிலத்தில் 5 ஆண்டுகால ஆட்சியை நிறைவு செய்யும் என சஞ்சய் ராவத் கூறியுள்ளார்.
    Next Story
    ×