search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    மந்திரி சுரேஷ்குமார்
    X
    மந்திரி சுரேஷ்குமார்

    கர்நாடகத்தில் தற்போதைக்கு பள்ளிகளை திறக்கும் திட்டம் இல்லை: மந்திரி சுரேஷ்குமார்

    கர்நாடகத்தில் தற்போதைக்கு பள்ளிகளை திறக்கும் திட்டமில்லை. இதுகுறித்து எம்.பி., எம்.எல்.ஏ.க்கள், ஆசிரியர் சங்கங்கள், கல்வித்துறை நிபுணர்கள் ஆகியோருடன் கலந்து ஆலோசனை நடத்தப்படும் என்று மந்திரி சுரேஷ்குமார் கூறியுள்ளார்.
    பீதர் :

    கர்நாடகத்தில் கொரோனா வைரஸ் பரவல் காரணமாக நடப்பு கல்வி ஆண்டில் பள்ளி கல்லூரிகள் திறக்கப்படவில்லை. ஆன்லைன் மூலமாக குழந்தைகளுக்கு கல்வி கற்பித்தல் பணி நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் அக்டோபர் மாதம் பள்ளிகள் திறக்கப்படும் என்று தகவல் வெளியாகியுள்ளது.

    இந்த தகவலை கர்நாடக பள்ளி கல்வித்துறை மந்திரி சுரேஷ்குமார் மறுத்துள்ளார். இதுகுறித்து அவர் பீதரில் நேற்று நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-

    கர்நாடகத்தில் பள்ளி-கல்லூரிகளை திறப்பது குறித்து மாநில அரசு எந்த முடிவும் எடுக்கவில்லை. இதுகுறித்து எம்.பி., எம்.எல்.ஏ.க்கள், ஆசிரியர் சங்கங்கள், கல்வித்துறை நிபுணர்கள் ஆகியோருடன் கலந்து ஆலோசனை நடத்தப்படும். தற்போதைய நிலையில் பள்ளிகளை திறக்கும் திட்டம் இல்லை. நான் பெங்களூரு வந்த பிறகு இது குறித்து ஆலோசனை நடத்த உள்ளேன். தற்போதைக்கு அவ்வளவு தான் என்னால் கூற முடியும்.

    இவ்வாறு சுரேஷ்குமார் கூறினார்.
    Next Story
    ×