search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கோப்புப்படம்
    X
    கோப்புப்படம்

    ஆக்ஸ்போர்டு தடுப்பூசியில் 20 கோடி ‘டோஸ்கள்’ தயாரிக்கும் புனே நிறுவனம்

    ஆக்ஸ்போர்டு கொரோனா தடுப்பூசியில் 20 கோடி டோஸ்களை அடுத்த ஆண்டுக்குள் சிரம் நிறுவனம் தயாரித்து வழங்கும் ஒப்பந்தம் கையெழுத்தாகி உள்ளதாக கூறியுள்ளது.
    புதுடெல்லி:

    ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகமும், அஸ்ட்ரா ஜெனேகா நிறுவனமும் இணைந்து உருவாக்கி உள்ள கொரோனா தடுப்பூசியை தயாரிக்க புனேயில் உள்ள சிரம் நிறுவனம் உரிமம் பெற்றுள்ளது. இந்த தடுப்பூசியின் 3-ம் கட்ட பரிசோதனையை மேற்கொண்டு வரும் இந்த நிறுவனம், இந்தியா மற்றும் ஏழை மற்றும் நடுத்தர நாடுகளுக்காக 20 கோடி டோஸ் தயாரிக்க முடிவு செய்துள்ளது.

    இதற்காக பில்-மெலிண்டா கேட்ஸ் அறக்கட்டளை மற்றும் காவி தடுப்பூசி கூட்டணி, 300 மில்லியன் டாலரை (சுமார் ரூ.2,200 கோடி) ‘சிரம்’ நிறுவனத்துக்கு வழங்கி உள்ளன. முதலில் 150 மில்லியன் டாலர் வழங்கப்பட்டு இருந்த நிலையில் தற்போது இது 300 மில்லியன் டாலராக அதிகரிக்கப்பட்டு உள்ளது. இந்த 20 கோடி டோஸ்களையும் அடுத்த ஆண்டுக்குள் சிரம் நிறுவனம் தயாரித்து வழங்கும்.

    இது தொடர்பான ஒப்பந்தம் கையெழுத்தாகி உள்ளதாக சிரம் நிறுவனம் கூறியுள்ளது. இந்த ஒப்பந்தப்படி ஒரு டோஸ் தடுப்பூசிக்கு 3 டாலருக்கு மேல் வாங்க முடியாது என அந்த நிறுவனம் கூறியுள்ளது.
    Next Story
    ×