search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கொரோனா பரிசோதனை
    X
    கொரோனா பரிசோதனை

    கேரளாவில் அதிகரிக்கும் கொரோனா தொற்று - மருத்துவ அவசர நிலையை அறிவிக்க கோரிக்கை

    கேரளாவில் கொரோனா தொற்று அதிவேகமாக பரவுவதால், மருத்துவ அவசரநிலையை அறிவிக்க வேண்டும் என ஐஎம்ஏ எனப்படும் இந்திய மருத்துவர்கள் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.
    திருவனந்தபுரம்:

    கேரளாவில் கடந்த 28 நாட்களில் மட்டும் ஒரு லட்சம் பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. வரும் நாட்களில் அங்கு தினசரி கொரோனா எண்ணிக்கை 10 ஆயிரத்தை தாண்டும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    கேரளாவில் கொரோனா தொற்று நாளுக்கு நாள் பலமடங்கு அதிகரித்து வருவதை இந்திய மருத்துவர்கள் சங்கம் சுட்டிக்காட்டி உள்ளது.

    நோயின் தீவிரத்தை மக்கள் உணரவும், தொற்று பரவுவதைக் கட்டுப்படுத்தவும் மருத்துவ அவசர நிலை பிறப்பிப்பது அவசியம் என அவர்கள் கூறியுள்ளனர்.

    கொரோனா பரவல் அதிகரிப்பால் கொல்லம் மாவட்டத்தின் சவரா, ஆலப்புழாவின் குட்டநாடு ஆகிய இரண்டு தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் தற்போது நடத்தப்படாது என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
    Next Story
    ×