search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கொரோனா பரிசோதனை
    X
    கொரோனா பரிசோதனை

    கர்நாடகத்தில் இதுவரை 47 லட்சம் பேருக்கு கொரோனா பரிசோதனை

    கர்நாடகத்தில் இதுவரை 47 லட்சம் பேருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு உள்ளதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
    பெங்களூரு :

    கர்நாடக சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    கர்நாடகத்தில் நேற்று முன்தினம் வரை 5 லட்சத்து 75 ஆயிரத்து 566 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டிருந்தனர். இந்த நிலையில் மாநிலத்தில் புதிதாக 6,892 பேருக்கு வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளது. இதன் மூலம் மாநிலத்தில் கொரோனா பாதித்தோரின் மொத்த எண்ணிக்கை 5 லட்சத்து 82 ஆயிரத்து 458 ஆக அதிகரித்துள்ளது.

    வைரஸ் தொற்றுக்கு நேற்று முன்தினம் வரை 8,582 பேர் உயிரிழந்து இருந்தனர். நேற்று புதிதாக 59 பேர் இறந்தனர். இதன்மூலம் உயிரிழந்தோர் எண்ணிக்கை 8,641 ஆக உயர்ந்து உள்ளது. புதிதாக கொரோனா பாதித்தோரில் பாகல்கோட்டையில் 191 பேர், பல்லாரியில் 164 பேர், பெலகாவியில் 78 பேர், பெங்களூரு புறநகரில் 110 பேர், பெங்களூரு நகரில் 2,722 பேர், பீதரில் 45 பேர், சாம்ராஜ்நகரில் 64 பேர், சிக்பள்ளாப்பூரில் 106 பேர், சிக்கமகளூருவில் 219 பேர், சித்ரதுர்காவில் 176 பேர், தட்சிண கன்னடாவில் 217 பேர், தாவணகெரேயில் 107 பேர், தார்வாரில் 145 பேர், கதக்கில் 61 பேர், ஹாசனில் 320 பேர், ஹாவேரியில் 83 பேர், கலபுரகியில் 273 பேர், குடகில் 25 பேர், கோலாரில் 90 பேர், கொப்பலில் 45 பேர், மண்டியாவில் 209 பேர், மைசூருவில் 240 பேர், ராய்ச்சூரில் 52 பேர், ராமநகரில் 75 பேர், சிவமொக்காவில் 181 பேர், துமகூருவில் 187 பேர், உடுப்பியில் 332 பேர், உத்தரகன்னடாவில் 176 பேர், விஜயாப்புராவில் 117 பேர், யாதகிரியில் 82 பேர் உள்ளனர்.

    கொரோனாவுக்கு நேற்று ஒரேநாளில் பெங்களூரு நகரில் 9 பேர், தட்சிண கன்னடாவில் 7 பேர், பல்லாரி, சிவமொக்காவில் தலா 6 பேர், பெலகாவி, ஹாசன், ஹாவேரி, துமகூருவில் தலா 4 பேர், கலபுரகி, மைசூரு, உத்தர கன்னடாவில் தலா 2 பேர், சாம்ராஜ்நகர், சிக்பள்ளாப்பூர், சிக்கமகளூரு, தாவணகெரே, குடகு, ராய்ச்சூர், விஜயாப்புரா, யாதரியில் தலா ஒருவர் என மொத்தம் 59 பேர் உயிரிழந்து உள்ளனர். கடந்த சில தினங்களாக பெங்களூருவில் கொரோனா உயிரிழப்பு 30 முதல் 40-ஐ தாண்டி சென்றது. நேற்று வெறும் 9 பேர் தான் உயிரிழந்து உள்ளனர். இது நகரவாசிகளுக்கும், அரசுக்கும் சற்று ஆறுதல் அளித்து உள்ளது.

    நேற்று ஒரே நாளில் 7,509 பேர் குணமடைந்து வீடு திரும்பினர். ஒட்டுமொத்தமாக இதுவரை 4 லட்சத்து 69 ஆயிரத்து 750 பேர் குணமடைந்து உள்ளனர். 1 லட்சத்து 4 ஆயிரத்து 48 பேர் சிகிச்சையில் உள்ளனர். தீவிர சிகிச்சை பிரிவில் 822 பேர் உள்ளனர். நேற்று 58 ஆயிரத்து 862 பேருக்கு கொரோனா பரிசோதனை நடத்தப்பட்டது. ஒட்டுமொத்தமாக இதுவரை 47 லட்சத்து 18 ஆயிரத்து 722 பேருக்கு கொரோனா பரிசோதனை நடத்தப்பட்டு உள்ளது.

    இவ்வாறு சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

    Next Story
    ×