search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    எடியூரப்பா சித்தராமையா
    X
    எடியூரப்பா சித்தராமையா

    கர்நாடகத்தை கொத்தடிமை நிலைக்கு தள்ளுகிறார்: எடியூரப்பா மீது சித்தராமையா குற்றச்சாட்டு

    வேளாண் சட்டங்கள் திருத்தத்தின் மூலம் கர்நாடகத்தை கொத்தடிமை நிலைக்கு தள்ளுகிறார் என எடியூரப்பா மீது சித்தராமையா குற்றம்சாட்டியுள்ளார்.
    பெங்களூரு :

    கர்நாடக சட்டசபை எதிர்க்கட்சி தலைவர் சித்தராமையா தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது:-

    கர்நாடக அரசு நில சீர்திருத்த சட்டம் மற்றும் வேளாண்மை சந்தைகள் சட்டத்தில் திருத்தம் கொண்டு வந்துள்ளது. வேளாண்மை சந்தைகள் சட்ட திருத்தத்தால் விவசாயிகள் மட்டுமின்றி நுகர்வோரும் பாதிக்கப்படும் நிலை உள்ளது.

    விவசாயிகளிடம் இருந்து குறைந்த விலைக்கு விளை பொருட்களை வாங்கி அதை நுகர்வோருக்கு அதிக விலைக்கு தனியார் நிறுவனங்கள் விற்பனை செய்யும். இதன் மூலம் பொதுமக்கள் ஏமாற்றப்படுவார்கள். உழுபவனுக்கே நிலம் என்று தேவராஜ் அரஸ் முதல்-மந்திரியாக இருந்தபோது காங்கிரஸ் அரசு சட்டம் கொண்டு வந்தது.

    இப்போது சிறு விவசாயிகளின் நிலத்தை பறித்து பணக்காரர்களுக்கு கொடுக்க பா.ஜனதா அரசு முடிவு செய்துள்ளது. இதில் எந்த கட்சி விவசாயிகளுக்கு ஆதரவாக செயல்படுகிறது?. விவசாய நிலத்தை யார் வேண்டுமானாலும் வாங்கிக் கொள்ளலாம் என்று கர்நாடக அரசு நில சீர்திருத்த சட்டத்தில் திருத்தம் செய்துள்ளது.

    இதன் மூலம் பணக்காரர்கள் விவசாய நிலத்தை வாங்கி அதில் தொழிற்சாலை, நிறுவனங்கள் போன்றவற்றைஅமைப்பார்கள். இதனால் விவசாயம் நாசமாகிவிடும். நாட்டின் மொத்த விவசாயிகளில் 86 சதவீதம் பேர் சிறு விவசாயிகளாக உள்ளனர்.

    இந்த விவசாயிகள் தங்களின் நிலத்தை விற்பனை செய்துவிட்டு நகரங்களை நோக்கி வந்து கூலி வேலை தேடுவார்கள். மத்திய அரசு உத்தரவின் பேரில் முதல்-மந்திரி எடியூரப்பா இந்த சட்டத் திருத்தங்களை கொண்டு வந்துள்ளார்.

    மத்திய அரசின் தாளத்திற்கு ஏற்ப இவர் ஆடுகிறார். எடியூரப்பா மாநிலத்தை கொத்தடிமை நிலைக்கு தள்ளுகிறார். இந்த அரசு வெட்கப்பட வேண்டும்.

    இவ்வாறு சித்தராமையா தெரிவித்துள்ளார்.
    Next Story
    ×