search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கோப்புப்படம்
    X
    கோப்புப்படம்

    ‘மசாஜ்’ ஆசையால் பிணைக்கைதி ஆனார், விஞ்ஞானி - போலீஸ் அதிரடியால் மீட்பு

    ‘மசாஜ்’ ஆசை, சாமானிய மனிதர்களை மட்டுமல்ல, விஞ்ஞானியையும் விட்டு வைப்பது இல்லை. அப்படி ஒரு சம்பவம் டெல்லி அருகே அரங்கேறியது.
    டெல்லியில் அரசுத்துறையில் பணியாற்றிக்கொண்டு, நொய்டாவில் குடும்பத்துடன் வசிக்கும் 45 வயது விஞ்ஞானி அவர். ஆன்லைனில் வெளியான ‘மசாஜ்’ கவர்ச்சி விளம்பரம் பார்த்து மதிமயங்கினார். அதில் கூறப்பட்டிருந்த செல்போன் எண்ணை தொடர்பு கொண்டு பேசினார். அதில் பேசிய நபர், சனிக்கிழமை இரவு குறிப்பிட்ட ஓட்டலில், குறிப்பிட்ட எண் அறைக்கு வருமாறு கூறி உள்ளார். சனிக்கிழமை மாலையில் மனைவியிடம் விஞ்ஞானி, “சிட்டி சென்டர் வரை போய் வருகிறேன்” என கூறி விட்டு, ஆசை ஆசையாக குறிப்பிட்ட ஓட்டலுக்கு சென்றார். அங்கே சென்றால் ஒரு பெண்ணுடன் சில ஆண்களும் இருந்தனர். அவர்கள் விஞ்ஞானியை சிறைபிடித்தனர்.

    வெளியே சென்ற கணவர் வீடு திரும்பாததால் பதற்றத்தில் அவர் மனைவி இருந்தபோது, செல்போன் அழைப்பு வந்தது. அதில் பேசிய நபர்கள், “உங்கள் கணவரை கடத்தி வைத்துள்ளோம். அவரை பத்திரமாக விடுவிக்க வேண்டுமானால் ரூ.10 லட்சம் தர வேண்டும்” என மிரட்டினர். பணத்துடன் ஓட்டலுக்கு வருமாறு கூறினர். ஆனால் அவ்வளவு பணத்துக்கு ஏற்பாடு செய்ய முடியாத நிலையில், அவரது மனைவி ஞாயிற்றுக்கிழமை காலை போலீசில் புகார் செய்தார்.

    போலீசார் உடனே குறிப்பிட்ட ஓட்டலுக்கு விரைந்து, அதிரடியாக மீட்பு நடவடிக்கையில் இறங்கினர். அதில் விஞ்ஞானி பத்திரமாக மீட்கப்பட்டார். அவரை பிணைக்கைதியாக பிடித்த சுனிதா என்ற பெண்ணும், 2 ஆண்களும் கைது செய்யப்பட்டனர். அவர்களின் கூட்டாளிகள் 2 பேர் தலைமறைவாகி உள்ளனர். இந்த சம்பவம், அங்கு பெரும்பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
    Next Story
    ×