search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    மத்திய அமைச்சர் ராம்தாஸ் அத்வாலே
    X
    மத்திய அமைச்சர் ராம்தாஸ் அத்வாலே

    சரத் பவார் பா.ஜனதா கூட்டணியில் இணைய வேண்டும்: மத்திய அமைச்சர்

    சிவசேனா பா.ஜனதாவுடன் கைக்கோர்க்க வேண்டும் என மத்திய அமைச்சர் ராம்தாஸ் அத்வாலே தெரவித்துள்ளார்.
    இந்துத்வா கொள்கையில் ஒரே பார்வை கொண்ட பா.ஜனதா மற்றும் சிவசேனா கட்சிகள் நீண்ட காலமாக கைக்கோர்த்து சென்றன. மகாராஷ்டிர மாநில சட்டசபை தேர்தலில் இரு கட்சிகளும் கூட்டணி வைத்து தேர்தலை சந்தித்தன. தேர்தலில் பா.ஜனதா தலைமையிலான கூட்டணி அமோக வெற்றி பெற்றது. ஆனால் பா.ஜனதாவுக்கு தனி மெஜாரிட்டி கிடைக்கவில்லை.

    இதனால் ஆட்சி அமைப்பதில் இழுபறி ஏற்பட்டது. இறுதியில் சிவசேனா தேசியவாத காங்கிரஸ், காங்கிரஸ் கட்சிகளுடன் இணைந்து ஆட்சியை பிடித்தது. அதில் இருந்து பா.ஜனதாவுக்கும் சிவசேனாவுக்கும் இடையில் மோதல் போக்கு ஏற்பட்டுள்ளது.

    இந்நிலையில் மகாராஷ்டிரா மாநில மத்திய அமைச்சரான ராம்தாஸ் அத்வாலே கூறுகையில் ‘‘சிவசேனா பா.ஜனதாவுடன் கைக்கோர்க்க வேண்டும். சிவசேனா எங்களுடன் வரவில்லை என்றால், தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தலைவர் சரத் பவார் தேசிய ஜனநாயக கூட்டணில் மாநில வளர்ச்சியாக சேர வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன். அவருக்கு மிகப்பெரிய பதவி கிடைக்கலாம். சரத் பவாருக்கு சிவ சேனாவுடன் இருப்பதால் எந்த ஆதாயமும் இல்லை’’ எனத் தெரிவித்துள்ளார்.
    Next Story
    ×