search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பாதுகாப்பு கொள்முதல் கவுன்சில் (கோப்புப்படம்)
    X
    பாதுகாப்பு கொள்முதல் கவுன்சில் (கோப்புப்படம்)

    இந்திய ராணுவத்திற்கு 2,290 கோடி ரூபாய்க்கு ஆயுதங்கள் வாங்க பாதுகாப்பு கொள்முதல் கவுன்சில் ஒப்புதல்

    இந்திய ராணுவத்துக்கு 2,290 கோடி ரூபாய் அளவிற்கு ஆயுதங்கள் வாங்க பாதுகாப்பு கொள்முதல் கவுன்சில் ஒப்புதல் வழங்கியுள்ளது.
    எல்லையில் சீனா அத்துமீறி வருவதால் இந்தியா ராணுவத்தை பலப்படுத்தி வருகிறது. மேலும், விமானப்படை, கப்பற்படையையும் வலிமைப்படுத்த திட்டமிட்டுள்ளது. இந்நிலையில் இந்திய ஆயுதப்படைக்கு 2,290 கோடி ரூபாய் அளவில் ஆயதங்கள் வாங்க செய்ய பாதுகாப்பு கொள்முதல் கவுன்சில் சம்மதம் தெரிவித்துள்ளது.

    இந்த ஆயுதங்களை அடுத்த ஐந்து வருடங்களுக்களும் கொள்முதல் செய்கிறது. கப்பற்படை மற்றும் விமானப்படைக்கு ஸ்மார்ட் எதிர்ப்பு ஏர்பீல்டு ஆயதங்கள் வாங்க இருக்கிறது. 780 கோடி ரூபாய் அளவில் நவீன துப்பாக்கிகள் வாங்க இருக்கின்றன.
    Next Story
    ×