search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    போராட்டத்தின்போது தீ வைத்து எரிக்கப்பட்ட டிராக்டர்
    X
    போராட்டத்தின்போது தீ வைத்து எரிக்கப்பட்ட டிராக்டர்

    டெல்லி இந்தியா கேட்டில் டிராக்டருக்கு தீ வைப்பு- பஞ்சாப் இளைஞர் காங்கிரஸ் ஆவேச போராட்டம்

    டெல்லியில் பஞ்சாப் இளைஞர் காங்கிரஸ் சார்பில் நடைபெற்ற போராட்டத்தின்போது டிராக்டர் தீ வைத்து எரிக்கப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
    புதுடெல்லி:

    மத்திய அரசு நிறைவேற்றி உள்ள வேளாண் மசோதாக்களை கண்டித்து நாடு முழுவதும் விவசாயிகள், எதிர்க்கட்சியினர் தொடர் போராட்டங்களில் ஈடுபட்டுள்ளனர். பஞ்சாப் மாநிலத்தில் விவசாய அமைப்புகளின் ரெயில் மறியல் போராட்டம் நீடிக்கிறது. மத்திய அரசின் வேளாண் சட்ட மசோதாக்களை திரும்பப்பெற வலியுறுத்தியும், அதற்கு துணை போகும் அ.தி.மு.க. அரசை கண்டித்தும் தமிழகத்தில் இன்று திமுக மற்றும் கூட்டணி கட்சிகள் ஆர்ப்பாட்டம் நடத்துகின்றனர்.

    இந்நிலையில், டெல்லியின் மையப்பகுதியான இந்தியா கேட் அருகே இன்று காலை பஞ்சாப் இளைஞர் காங்கிரஸ் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அப்போது ஒரு டிராக்டர் தீ வைத்து எரிக்கப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. மினி லாரியில் ஏற்றி வந்த டிராக்டரை சாலையின் நடுவே தள்ளிவிட்டு, திடீரென தீ வைத்தனர். இதனை பேஸ்புக் வாயிலான நேரலை செய்தனர். பின்னர் தீயணைப்பு வீரர்கள் வந்து தீயை அணைத்தனர்.

    இதுதொடர்பாக 5 பேரை போலீசார் பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர். அவர்கள் பயணம் மேற்கொண்ட காரையும் பறிமுதல் செய்தனர்.

    இது காங்கிரஸ் கட்சியின் நாடகம் என்றும், இதனால்தான் மக்கள் காங்கிரசை ஆட்சி அதிகாரத்தில் இருந்து வெளியேற்ற வாக்களித்தனர் என்றும் மத்திய மந்திரி பிரகாஷ் ஜவடேகர் கூறி உள்ளார்.
    Next Story
    ×