search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கோப்புப்படம்
    X
    கோப்புப்படம்

    மத்திய போலீஸ் படைகளில் 36 ஆயிரம் பேருக்கு கொரோனா - 128 பேர் உயிரிழப்பு

    மத்திய போலீஸ் படைகளில் 36 ஆயிரம் பேருக்கு கொரோனா தொற்று பாதிப்பு ஏற்பட்டது. 128 பேர் உயிரிழந்துள்ளனர்.
    புதுடெல்லி:

    கொரோனா வைரஸ் பெருந்தொற்று நோய் சாமானியர்கள் முதல் அரசியல் தலைவர்கள் வரை தாக்கி வருகிறது.

    மத்திய ரிசர்வ் போலீஸ் படை (சி.ஆர்.பி.எப்.), எல்லை பாதுகாப்பு படை (பி.எஸ்.எப்.), மத்திய தொழிற்பாதுகாப்பு படை (சி.ஐ.எஸ்.எப்.), இந்திய திபெத் போலீஸ் படை (ஐ.டி.பி.பி.), சாஷத்ர சீமாபால் (எஸ்.எஸ்.பி.), தேசிய பாதுகாப்பு படை (என்.எஸ்.ஜி.), தேசிய பேரிடர் மீட்பு படை (என்.டி.ஆர்.எப்.) ஆகிய 7 மத்திய போலீஸ் படையினரையும் விட்டு வைக்கவில்லை.

    அந்த வகையில் குறைந்தது 36 ஆயிரம் பேரை கொரோனா தொற்று பாதித்துள்ளது. அதிகபட்சமாக எல்லை பாதுகாப்பு படையில் 10 ஆயிரத்து 636 பேருக்கு தொற்று ஏற்பட்டது. மத்திய ரிசர்வ் போலீஸ் படையில் 10 ஆயிரத்து 602, மத்திய தொழிற்பாதுகாப்பு படையில் 6,466, இந்திய திபெத் போலீஸ் படையில் 3,845, சாஷத்ர சீமாபால் படையில் 3,684, தேசிய பேரிடர் மீட்பு படையில் 514, தேசிய பாதுகாப்பு படையில் 250 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டது.

    தொற்று பாதித்தவர்களில் சிகிச்சை பலனின்றி 128 பேர் உயிரிழந்துள்ளனர். அதிகபட்சமாக மத்திய ரிசர்வ் போலீஸ் படையில் 52 பேர் பலியாகி உள்ளனர். மற்ற படைகளில் எல்லை பாதுகாப்பு படையில் 29 பேர், மத்திய தொழிற்பாதுகாப்பு படையில் 28 பேர், இந்திய திபெத் போலீஸ் படையிலும், சாஷத்ர சீமாபால் படையிலும் தலா 9 பேர், தேசிய பேரிடர் மீட்பு படையில் ஒருவர் இறந்துள்ளனர்.

    தற்போது கொரோனா பாதிப்புக்காக பல்வேறு ஆஸ்பத்திரிகளில் மத்திய போலீஸ் படையினர் 6,646 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
    Next Story
    ×