search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    தேஜஸ்வி யாதவ்
    X
    தேஜஸ்வி யாதவ்

    பீகாரில் ஆட்சிக்கு வந்தால் 10 லட்சம் அரசு வேலை அளிப்போம் - லாலு கட்சி வாக்குறுதி

    பீகாரில் நாங்கள் ஆட்சிக்கு வந்தால், 10 லட்சம் நிரந்தர அரசு வேலைகள் அளிப்போம் என லாலு கட்சி வாக்குறுதி அளித்துள்ளது.
    பாட்னா:

    பீகார் சட்டசபை தேர்தல் 3 கட்டங்களாக நடக்கிறது. இதையொட்டி, லாலுபிரசாத் யாதவின் ராஷ்டிரீய ஜனதாதளம் தலைமையிலான எதிர்க்கட்சி கூட்டணியின் முதல்-மந்திரி வேட்பாளராக லாலு மகன் தேஜஸ்வி யாதவ் நிறுத்தப்பட்டுள்ளார்.

    இந்தநிலையில், நேற்று அவர் தனது தேர்தல் அறிக்கையை வெளியிட்டார். அப்போது அவர் கூறியதாவது:-

    பீகாரில் டாக்டர்கள், ஆசிரியர்கள், போலீஸ் என ஏராளமான காலியிடங்கள் உள்ளன. இவற்றை நிரப்ப நிதிஷ்குமார் நடவடிக்கை எடுக்கவில்லை.

    நாங்கள் ஆட்சிக்கு வந்தால், 10 லட்சம் நிரந்தர அரசு வேலைகள் அளிப்போம். முதலாவது மந்திரிசபை கூட்டத்திலேயே இதற்கான ஒப்புதல் அளிக்கப்படும். இது போலி வாக்குறுதி அல்ல. உறுதியாக நிறைவேற்றுவோம்.

    இவ்வாறு அவர் கூறினார்.
    Next Story
    ×