search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பீகார் சட்டமன்றம்
    X
    பீகார் சட்டமன்றம்

    பீகார் சட்டமன்ற தேர்தல் அட்டவணை- முதல்கட்ட தேர்தலுக்கு அக்.1ம் தேதி மனு தாக்கல் ஆரம்பம்

    பீகார் மாநில சட்டமன்ற தேர்தல் அக்டோபர், நவம்பரில் 3 கட்டங்களாக நடத்தப்பட்டு, நவம்பர் 10ம் தேதி வாக்குகள் எண்ணப்படுகின்றன.
    புதுடெல்லி:

    பீகார் மாநிலத்தில் அக்டோபர் 28, நவம்பர் 3 மற்றும் நவம்பர் 7 ஆகிய நாட்களில் மூன்று கட்டங்களாக சட்டமன்றத் தேர்தல் நடத்தப்பட உள்ளது. முதற்கட்ட தேர்தலில் 16 மாவட்டங்களில் உள்ள 71 தொகுதிகளிலும், இரண்டாவது கட்டமாக 17 மாவட்டங்களில் உள்ள 94 தொகுதிகளிலும், மூன்றாவது கட்டமாக 15 மாவட்டங்களில் 78 தொகுதிகளிலும் வாக்குப்பதிவு நடைபெறும். 3 கட்ட தேர்தல்களிலும் பதிவான வாக்குகள் நவம்பர் 10ம் தேதி எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படும். 

    முதற்கட்ட தேர்தல்:

    வேட்பு மனு தாக்கல் ஆரம்பம்- அக்டோபர் 1
    மனு தாக்கல் செய்ய கடைசி நாள் - அக்டோபர் 8
    மனுக்கள் பரிசீலனை - அக்டோபர் 9
    மனுக்களை திரும்ப பெற கடைசிநாள் - அக்டோபர் 12
    வாக்குப்பதிவு -அக்டோபர் 28
    வாக்கு எண்ணிக்கை - நவம்பர் 10

    இரண்டாம் கட்ட தேர்தல்:

    வேட்பு மனு தாக்கல் ஆரம்பம்- அக்டோபர் 9
    மனு தாக்கல் செய்ய கடைசி நாள் - அக்டோபர் 16
    மனுக்கள் பரிசீலனை - அக்டோபர் 17
    மனுக்களை திரும்ப பெற கடைசிநாள் - அக்டோபர் 19
    வாக்குப்பதிவு -நவம்பர் 3
    வாக்கு எண்ணிக்கை - நவம்பர் 10

    மூன்றாம் கட்ட தேர்தல்:

    வேட்பு மனு தாக்கல் ஆரம்பம்- அக்டோபர் 13
    வேட்பு மனு தாக்கல் செய்ய கடைசி நாள் - அக்டோபர் 20
    மனுக்கள் பரிசீலனை - அக்டோபர் 21
    மனுக்களை திரும்ப பெற கடைசிநாள் - அக்டோபர் 23
    வாக்குப்பதிவு -நவம்பர் 7
    வாக்கு எண்ணிக்கை - நவம்பர் 10.
    Next Story
    ×