என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
பீகார் சட்டமன்ற தேர்தல்- வேட்பாளர்கள் ஆன்லைன் மூலம் வேட்பு மனு தாக்கல் செய்யலாம்
Byமாலை மலர்25 Sep 2020 9:29 AM GMT (Updated: 25 Sep 2020 9:29 AM GMT)
பீகார் தேர்தலில் வேட்புமனு தாக்கல் செய்ய வரும் வேட்பாளருடன் இரண்டு நபர்கள் மட்டுமே வர அனுமதி அளிக்கப்படும் என தலைமை தேர்தல் ஆணையர் சுனில் அரோரா தெரிவித்துள்ளார்.
புதுடெல்லி:
இந்திய தலைமை தேர்தல் ஆணையர் சுனில் அரோரா இன்று டெல்லியில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
கொரோனா பெருந்தொற்றுக்கு மத்தியில் மிகப்பெரிய தேர்தல் பீகார் மாநிலத்தில் நடத்தப்பட உள்ளது. பீகார் மாநிலத்தில் 3 கட்டங்களாக சட்டமன்றத் தேர்தல் நடத்தப்படுகிறது. அக்டோபர் 28, நவம்பர் 3 மற்றும் 7 ஆகிய நாட்களில் வாக்குப்பதிவு நடத்தப்படும்.
முதற்கட்ட தேர்தலில் 16 மாவட்டங்களில் உள்ள 71 தொகுதிகளிலும், இரண்டாவது கட்டமாக 17 மாவட்டங்களில் 94 தொகுதிகளிலும், 15 மாவட்டங்களில் 78 தொகுதிகளிலும் வாக்குப்பதிவு நடைபெறும். 3 கட்ட தேர்தல்களிலும் பதிவான வாக்குகள் நவம்பர் 10ம் தேதி எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படும்.
வேட்பாளர்கள் ஆன்லைன் மூலமாக வேட்பு மனுக்களை தாக்கல் செய்ய முடியும். சம்பந்தப்பட்ட தேர்தல் அதிகாரிகளிடம் நேரடியாகவும் வழங்கலாம். ஆன்லைன் மூலம் மனு தாக்கல் செய்வோர், ஆன்லைன் வாயிலாகவே டெபாசிட் தொகையை செலுத்த முடியும்.
வேட்புமனு தாக்கல் செய்ய வரும் வேட்பாளருடன் இரண்டு நபர்கள் மட்டுமே வர அனுமதி அளிக்கப்படும். பிரச்சாரம், வீடு வீடாக வாக்குசேகரிப்புக்கு மூன்று நபர்களுக்கு மட்டுமே அனுமதி. பிரச்சார வாகன அணிவகுப்பில் 5 கார்கள் மட்டுமே செல்லலாம்.
இவ்வாறு அவர் கூறினார்.
Next Story
×