search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ரெயில் மறியலில் ஈடுபட்ட விவசாயிகள்
    X
    ரெயில் மறியலில் ஈடுபட்ட விவசாயிகள்

    வேளாண் மசோதாக்களுக்கு எதிராக பஞ்சாப் விவசாயிகள் ரெயில் மறியல்- 28 ரெயில்கள் ரத்து

    வேளாண் மசோதாக்களுக்கு எதிராக பஞ்சாப் மாநிலத்தில் விவசாயிகளின் 3 நாள் ரெயில் மறியல் போராட்டம் தொடங்கியது.
    சண்டிகர்:

    மத்திய அரசு பாராளுமன்றத்தில் நிறைவேற்றி உள்ள வேளாண் மசோதாக்களுக்கு எதிராக பஞ்சாப் மாநிலத்தில் விவசாயிகள் போராட்டம் தீவிரமடைந்துள்ளது. வேளாண் மசோதாக்களுக்கு எதிராக இன்று முதல் மூன்று நாட்கள் ரெயில் மறியல் போராட்டம் நடத்தப்போவதாக விவசாய சங்கம் (கிசான் மஸ்தூர் சங்கர்ஷ் கமிட்டி) அறிவித்திருந்தது. அதன்படி இன்று காலை ரெயில் மறியல் போராட்டம் தொடங்கியது. மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் விவசாயிகள் ஒன்று திரண்டு தண்டவாளங்களில் அமர்ந்து ரெயில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

    ரெயில் மறியல் போராட்டம் காரணமாக பஞ்சாப் மாநிலத்தில் இன்று முதல் 26ம் தேதி வரை 28 ரெயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. சூழ்நிலைக்கு ஏற்ப சரக்கு ரெயில்கள் இயக்கப்படும் என மண்டல ரெயில்வே மேலாளர் தெரிவித்துள்ளார்.

    இதேபோல் பஞ்சாப் மாநிலத்தின் மற்றொரு விவசாய சங்கம், நாளை மாநிலம் தழுவிய முழு அடைப்பு போராட்டத்திற்கு அழைப்பு விடுத்துள்ளது. 

    இதற்கிடையே வேளாண் மசோதாக்களுக்கு எதிராக காங்கிரஸ் கட்சி நாடு தழுவிய போராட்டத்தை தொடங்கி உள்ளது. அந்தந்த மாநில தலைவர்கள் மற்றும் சட்டமன்ற குழு தலைவர்கள் பேரணியாக சென்று கவர்னரிடம் மனு அளிக்க உள்ளனர். மசோதாக்களுக்கு எதிராக கையெழுத்து இயக்கம் நடத்தி 2 கோடி விவசாயிகளிடம் கையெழுத்து பெற்றுள்ளனர். தமிழகத்தில் திமுக மற்றும் கூட்டணி கட்சிகள் சார்பில் 28ம் தேதி போராட்டம் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.
    Next Story
    ×