search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    மத்திய பிரதேச மந்திரி நரோத்தம் மிஸ்ரா
    X
    மத்திய பிரதேச மந்திரி நரோத்தம் மிஸ்ரா

    தவறை ஏற்றுக்கொள்கிறேன், இனி மாஸ்க் அணிவேன்- வருத்தம் தெரிவித்த மத்திய பிரதேச மந்திரி

    மாஸ்க் அணிய மாட்டேன் என கூறிய மத்திய பிரதேச உள்துறை மந்திரி நரோத்தம் மிஸ்ரா, தனது தவறை ஏற்றுக்கொண்டு வருத்தம் தெரிவித்தார்.
    போபால்:

    கொரோனா வைரஸ் பரவுவதை கட்டுப்படுத்துவதற்கு, பொது இடங்களுக்கு செல்லும்போது கண்டிப்பாக மாஸ்க் அணிய வேண்டும் என்றும், சமூக இடைவெளியை பின்பற்ற வேண்டும் என்றும் தொடர்ந்து வலியுறுத்தப்பட்டுவருகிறது. ஆனாலும் பலர் இதனை பின்பற்றுவதில்லை. மத்திய பிரதேச மாநிலத்தில் மந்திரி ஒருவர் மாஸ்க் அணிய மறுத்த விவகாரம் சர்ச்சையை ஏற்படுத்தியது.

    மத்திய பிரதேச மாநிலம் இந்தூரில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்ற மாநில உள்துறை மந்திரி நரோத்தம் மிஸ்ரா, மாஸ்க் அணியவில்லை. இதுபற்றி செய்தியாளர்கள் கேட்டதற்கு, ‘நான் எந்த நிகழ்ச்சியிலும் மாஸ்க் அணியமாட்டேன். அதனால் என்ன?’ என்று எதிர்கேள்வி எழுப்பினார்.

    கொரோனா கால விதிமுறையை பின்பற்ற மாட்டேன் என மந்திரி கூறியதற்கு காங்கிரஸ் கட்சி சமூக வலைத்தளம் வாயிலாக தனது கண்டனத்தை தெரிவித்தது. ‘முதல்வர் சிவ்ராஜ் சிங் சவுகான் மற்றும் பிரதமர் நரேந்திர மோடி ஆகியோருக்கு மாநில உள்துறை மந்திரி வெளிப்படையான சவால் விடுத்துள்ளார். அவருக்கு எதிராக நடவடிக்கை எடுக்க தைரியம் உள்ளவர்கள் யாராவது இருக்கிறார்களா? விதிகள் பொது மக்களுக்கு மட்டும் தானா? என மாநில காங்கிரஸ் தலைவர் நரேந்திர சலுஜா டுவிட்டரில் பதிவிட்டிருந்தார்.

    இந்நிலையில் தனது தவறை உணர்ந்து வருத்தம் தெரிவித்துள்ளார் மந்திரி நரேத்தம் மிஸ்ரா. இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில், ‘மாஸ்க் அணியமாட்டேன் என்று நான் கூறியது சட்ட மீறலாகத் தெரிகிறது. இது பிரதமரின் உணர்வுக்கு எதிரான கருத்து இல்லை. நான் என் தவறை ஏற்றுக்கொண்டு வருத்தம் தெரிவிக்கிறேன். நான் இனி மாஸ்க் அணிவேன், அத்துடன் அனைவரும் மாஸ்க் அணிந்து சமூக இடைவெளியை பின்பற்றும்படி கேட்டுக்கொள்கிறேன்’ என கூறியிருக்கிறார்.


    Next Story
    ×