search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கோப்புப்படம்
    X
    கோப்புப்படம்

    கொரோனாவை பிரதிபலிக்கும் புதிய கருவி - மருந்து கண்டுபிடிப்பை துரிதப்படுத்தும்

    கொரோனா வைரசை பிரதிபலிக்கும் புதிய கருவியை விஞ்ஞானிகள் உருவாக்கி உள்ளனர். இது, மருந்து கண்டுபிடிப்பை துரிதப்படுத்தும் என்று சொல்லப்படுகிறது.
    கொரோனா வைரசையே தாங்கிக்கொள்ள முடியவில்லை. அதை பிரதிபலிக்கும் கருவியையும் விஞ்ஞானிகள் உருவாக்கி இருக்கிறார்களா என முகத்தை சுளிக்காதீர்கள். உலகையே இன்று அச்சுறுத்தி வருகிற கொரோனா வைரஸ் எப்படி செல்களுக்குள் நுழைந்து, பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது என்பதை பிரதிபலிக்கும் புதிய கருவியை விஞ்ஞானிகள் உருவாக்கி இருப்பது, அந்த கொடிய தொற்று நோய்க்கு மருந்து கண்டுபிடிப்பதை துரிதப்படுத்தும் என்று சொல்கிறார்கள்.

    இந்த கருவிக்கு விஞ்ஞானிகள் ஏ.சி.எஸ்.நானோ என்று பெயரிட்டிருக்கிறார்கள். இது ஸ்பைக் புரதத்துடன் கூடிய ஒளிரும் நானோ துகள் கருவி ஆகும்.

    மனித செல்களுடன் பிணைக்கப்பட்டு அவற்றில் நுழைய கொரோனா வைரசுக்கு பயன்படுவது இந்த ஸ்பைக் புரதம்தான்.

    கொரோனா வைரசை போன்ற இந்த கருவியை உருவாக்கி இருக்கும் அமெரிக்காவின் தேசிய மேம்பட்ட மொழி பெயர்ப்பு அறிவியல் மையத்தின் ஆராய்ச்சியாளர்கள், மனித செல்களில் கொரோனா வைரஸ் பாதிப்பதை தடுப்பதற்கான சிகிச்சை முறைகளின் திறனை துரிதமாக கண்டறிவற்கு இந்த கருவியை பயன்படுத்தலாம் என்கிறார்கள்.

    கொரோனா வைரசை செல்களுடன் பிணைப்பதையும், பாதிப்பதையும் தடுப்பதற்கு ஒரு அமைப்பை உருவாக்குவதுதான் எங்களுடைய குறிக்கோளாக இருந்தது என்று ஆராய்ச்சியாளர்களில் ஒருவரான அமெரிக்க கடற்படை ஆராய்ச்சி பரிசோதனைக்கூடத்தின் விஞ்ஞானியான கிரில் கோர்ஷ்கோவ் கூறுகிறார்.

    ஆய்வுகளில் உண்மையான வைரசை பயன்படுத்தவது என்பது கடினமான ஒன்று, அதற்கு பிரத்யேக வசதிகள் தேவைப்படும், எனவே இந்த நானோ துகள்களை பயன்படுத்தி, கொரோனா வைரஸ், மனித செல்களுடன் பிணைத்து படையெடுப்பதை பிரதிபலிக்க வைத்திருக்கிறோம் என்று விஞ்ஞானிகள் சொல்கிறார்கள். இந்த நானோ துகள்கள், சுமார் 10 நானோ மீட்டர் அளவிலானது. அதாவது ஒரு மனித முடியின் அகலத்தை விட 3 ஆயிரம் மடங்கு சிறியவை.

    கொரோனா வைரஸ் நோய் தொற்றுக்கான பாதையின் முதல் படி, ஸ்பைக் புரோட்டினுடடன் மனித உடல் செல்லின் மேற்பரப்பில் உள்ள ஏசிஇ-2 என்ற புரதம் இணைவதுதான். இந்த நானோ துகள்கள், நுரையீரல் செல்லின்மேற்பரப்பில் உள்ள ஏசிஇ-2 புரதத்துடன் எவ்வாறு இணைகின்றன என்பதை ஆராய்ச்சியாளர்கள் கவனித்திருக்கிறார்கள்.

    இதுகுறித்து விஞ்ஞானிகள் கூறுகையில், “இந்த நானே துகள்கள் நச்சுத்தன்மையற்றவை. கொரோனா வைரஸ் செல்களில் நுழைகிற பாதையை பின்பற்றினாலும், அவை ஆன்டிபாடி என்னும் நோய் எதிர்ப்பு பொருட்களின் முன்னிலையிலும் கொரோனா வைரசை பிரதிபலிக்கின்றன. ஆன்டிபாடிகள், குவாண்டம் டாட் ஆய்வுகளின் சக்திவாய்ந்த தடுப்பான்களாக இருந்தன. அவை ஏசிஇ-2 உடன் பிணைக்கப்படுவதை தடுக்கின்றன. மனித செல்களில் நுழைவதையும் தடுக்கின்றன. இந்த அடிப்படையில், குவாண்டம் புள்ளிகள் ஆய்வுகள், வைரசை செல்களில் நுழைவதையும், பாதிப்பதையும் தடுப்பதற்கான சாத்தியமான சிகிச்சைகளின் திறனை விரைவாக சோதிக்க உதவும்” என்கிறார்கள். ஆக, கொரோனாவுக்கு மருந்து கண்டுபிடித்து சோதிப்பதை விரைவுபடுத்த இந்த ஏ.சி.எஸ்.நானோ உருவாக்கம் உதவும்.
    Next Story
    ×