search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    டீ கொண்டு வந்த மாநிலங்களவை துணை தலைவர் ஹரிவன்ஷ்
    X
    டீ கொண்டு வந்த மாநிலங்களவை துணை தலைவர் ஹரிவன்ஷ்

    தர்ணாவில் ஈடுபட்டுள்ள எம்பிக்களுக்கு டீ கொண்டு வந்த மாநிலங்களவை துணை தலைவர்

    பாராளுமன்ற வளாகத்தில் தர்ணாவில் ஈடுபட்டுள்ள எம்.பி.க்களுக்கு மாநிலங்களவை துணை தலைவர் ஹரிவன்ஷ் டீ கொண்டு வந்தது பரபரப்பை ஏற்படுத்தியது.
    புதுடெல்லி:

    பாராளுமன்ற மாநிலங்களவையில் வேளாண் மசோதா தாக்கல் செய்யப்பட்டு நிறைவேற்றப்பட்ட போது கடும் அமளி ஏற்பட்டது. 

    அப்போது திரிணாமுல் காங்கிரஸ், ஆம் ஆத்மி உள்ளிட்ட சில கட்சிகளின் உறுப்பினர்கள் துணைத் தலைவரின் இருக்கையை முற்றுகையிட்டு அமளியில் ஈடுபட்டனர். இதையடுத்து, அவை விதிமுறைகளை மீறி நடந்துகொண்ட 8 எம்பிக்களை ஒருவாரம் சஸ்பெண்ட் செய்து மாநிலங்களவை தலைவர் வெங்கையா நாயுடு உத்தரவிட்டார்.

    சஸ்பெண்ட் செய்யப்பட்டதைக் கண்டித்து 8 எம்.பிக்களும் பாராளுமன்ற வளாகத்தில் உள்ள காந்தி சிலை முன்பு விடிய விடிய தர்ணாவில் ஈடுபட்டனர்.

    இந்நிலையில், பாராளுமன்ற வளாகத்தில் தர்ணாவில் ஈடுபட்டுள்ள 8 எம்.பி.க்களை மாநிலங்களவை துணை தலைவர் ஹரிவன்ஷ் இன்று காலை சந்தித்தார். அவர்களுக்காக டீ கொண்டு வந்தார். ஆனால் அவர் அளித்த டீயை ஏற்க எம்.பி.க்கள் மறுத்துவிட்டனர்.
    Next Story
    ×