search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கொரோனா வார்டில் பணியாற்றும் டாக்டர்கள்-செவிலியர்
    X
    கொரோனா வார்டில் பணியாற்றும் டாக்டர்கள்-செவிலியர்

    கொரோனா வார்டில் பணியாற்றும் டாக்டர்கள்-செவிலியர்களுக்கு ஊக்கத்தொகை: கர்நாடக அரசு அறிவிப்பு

    கொரோனா வார்டுகளில் பணியாற்றும் டாக்டர்கள், செவிலியர்கள் உள்ளிட்ட பணியாளர்களுக்கு ஊக்கத்தொகை வழங்கப்படும் என்று கர்நாடக அரசு உத்தரவிட்டுள்ளது.
    பெங்களூரு :

    கர்நாடகத்தில் கொரோனா பாதிப்பு வேகமாக அதிகரித்து வருகிறது. அதே வேகத்தில் குணம் அடைகிறவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது. இன்னொருபுறம் மாநிலத்தில் கொரோனாவுக்கு பலியாவோரின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது, அரசுக்கு ஆதங்கத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த நிலையில் கொரோனா வார்டுகளில் பணியாற்றும் டாக்டர்கள், செவிலியர்கள் உள்ளிட்ட பணியாளர்களுக்கு ஊக்கத்தொகை வழங்கப்படும் என்று அரசு உத்தரவிட்டுள்ளது.

    டாக்டர்கள், ஆயுஸ் டாக்டர்கள், மருத்துவ நிபுணர்களுக்கு தலா ரூ.10 ஆயிரம், செவிலியர்கள், ஆய்வக தொழில்நுட்ப பணியாளர்கள், மருந்தாளுநர்கள் ஆகியோருக்கு தலா ரூ.5 ஆயிரம் வழங்கப்படும் என்று அரசு அறிவித்துள்ளது.
    Next Story
    ×