search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    நரேந்திரமோடி
    X
    நரேந்திரமோடி

    ஐநா சபையால் தான் இன்று உலகம் சிறப்பாக உள்ளது - பிரதமர் மோடி பேச்சு

    ஐநா சபையின் 75 ஆவது ஆண்டு விழாவில் பேசிய பிரதமர் மோடி ஐநா சபையால் தான் இன்று உலகம் சிறப்பாக உள்ளது என தெரிவித்தார்.
    புதுடெல்லி:

    இரண்டாம் உலகப்போருக்கு பின்னர் உலக அமைதி மற்றும் பாதுகாப்பை உறுதி செய்ய பல்வேறு நாடுகள் இணைந்து ஐக்கிய நாடுகள் சபை என்ற அமைப்பை உருவாக்கியது. இந்த அமைப்பு 1945 செப்டம்பர் 24 முதல் செயல்படத்தொடங்கியது.

    இதையடுத்து ஆண்டுதோறும் ஐநா சபையில் பல்வேறு சிறப்பு நிகழ்ச்சிகள் நடைபெறுவது வழக்கம். இந்நிலையில் ஐ.நா. அமைப்பு துவங்கி இந்த ஆண்டுடன் 75 ஆண்டுகள் நிறைவடைகிறது. இதற்காக இந்த ஆண்டு இன்று முதல் வரும் 29 ஆம் தேதி வரை ஐநா பொது சபையில் விவாதங்கள் நடைபெற்று வருகிறது.

    இந்த விவாத நிகழ்ச்சியில் உறுப்பு நாடுகளின் பல்வேறு தலைவர்கள் வீடியோ கான்பிரன்ஸ் வாயிலாக உரை நிகழ்த்தி வருகின்றனர். இந்நிலையில், ஐநா சபையின் 75 ஆவது ஆண்டு விழாவில் இன்று பல்வேறு நாடுகளை சேர்ந்த அதிபர்களும், பிரதமர்களும் வீடியோ கான்பிரன்ஸ் மூலம் உரை நிகழ்த்தினர். இந்திய பிரதமர் நரேந்திரமோடியும் இதில் பங்கேற்றார்.

    ஐநா சபையில் இந்திய பிரதமர் நரேந்திர மோடி வீடியோ கான்பிரன்ஸ் மூலம் பேசியதாவது:-

    போரின் கொடூரத்தில் இருந்து 75 ஆண்டுகளுக்கு முன்பு புதிய நம்பிக்கை பிறந்துள்ளது. மனித வரலாற்றில் முதல் முறையாக ஒட்டுமொத்த உலகத்திற்கென்று ஒரு அமைப்பு உருவாக்கப்பட்டுள்ளது.
        
    ஐ.நா.  கையொப்பமிட்டவராக அந்த உன்னத பார்வையின் ஒரு பகுதியாக இந்தியா உள்ளது. நமது உலகம் சிறப்பாக உள்ளதற்கு ஐக்கிய நாடுகள் சபை தான் காரணம்.  

    ஐ.நா. கொடியின் கீழ் அமைதி மற்றும் வளர்ச்சிக்கான காரணத்தை முன்வைத்த அனைவருக்கும் நாங்கள் மரியாதை செலுத்துகிறோம். அதில் இந்தியா ஒரு முன்னணி பங்களிப்பாளராக உள்ளது.

    மோதல் நடுப்பு, வளர்ச்சியை உறுதி செய்தல், பருவநிலை மாற்றம், சமத்துவமின்மையை குறைத்தல், டிஜிட்டல் தொழில்நுட்பத்தை மேம்பத்துதல் ஆகிய பிரகனடத்தை நாம் 
    ஏற்றுக்கொண்டுள்ளோம்.

    ஐக்கிய நாடுகள் சபையின் சீர்திருத்தத்தின் அவசியத்தையும் இந்த பிரகடனம் ஒப்புக்கொள்கிறது. காலாவதியான கட்டமைப்புகளுடன் இன்றைய சவால்களை எதிர்த்துப் போராட முடியாது. விரிவான சீர்திருத்தங்கள் இல்லாமல், ஐ.நா நம்பிக்கை நெருக்கடியை எதிர்கொள்கிறது.

    ஒன்றுக்கொன்று இணைந்த இன்றைய உலகில் யதார்த்தங்களை பிரதிபலிக்கும், அனைத்து பங்குதாரர்களுக்கும் குரல் கொடுக்கும், சவால்களை எதிர்கொள்ளும் மற்றும் மனித நலனில் கவனம் செலுத்தும் பன்முகத்தன்மை உடைய சீர்திருத்தங்கள் தேவைப்படுகிறது

    Next Story
    ×