search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கோப்புப்படம்
    X
    கோப்புப்படம்

    புனே ஆஸ்பத்திரியில் ஆக்ஸ்போர்டு தடுப்பூசியின் 3-ம் கட்ட பரிசோதனை தொடக்கம்

    புனே சசூன் அரசு மருத்துவமனையில் ஆக்ஸ்போர்டு தடுப்பூசியின் 3-ம் கட்ட பரிசோதனை நேற்று தொடங்கியது.
    புனே:

    இங்கிலாந்தின் ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகமும், அஸ்ட்ரா ஜெனேகா நிறுவனமும் இணைந்து கொரோனாவுக்கு எதிரான தடுப்பூசியை உருவாக்கி உள்ளன. இந்த தடுப்பூசியை ‘கோவிஷீல்டு’ என்ற பெயரில் புனேயில் உள்ள சீரம் நிறுவனம் தயாரிக்கிறது.

    இந்த நிறுவனம் சார்பில் மேற்படி தடுப்பூசியை மனிதர்களுக்கு செலுத்தி 2 கட்ட பரிசோதனைகள் முடிக்கப்பட்டு உள்ளன. இதில் 2-ம் கட்ட பரிசோதனைகள் பாரதி வித்யாபீடம் மருத்துவ கல்லூரியிலும், கே.இ.எம். ஆஸ்பத்திரியிலும் நடத்தப்பட்டது.

    இதைத்தொடர்ந்து 3-ம் கட்ட பரிசோதனை புனேயில் உள்ள சசூன் அரசு மருத்துவமனையில் நேற்று தொடங்கியது. இதில் 150 முதல் 200 வரையிலான தன்னார்வலர்களுக்கு தடுப்பூசி போடப்படுவதாக மருத்துவமனை டீன் டாக்டர் முரளிதர் தாம்பே தெரிவித்தார்.
    Next Story
    ×