search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பாதுகாப்புத்துறை மந்திரி ராஜ்நாத் சிங்
    X
    பாதுகாப்புத்துறை மந்திரி ராஜ்நாத் சிங்

    நானும் ஒரு விவசாயி தான்... குறைந்தபட்ச ஆதார விலை நடைமுறை முடிவுக்கு வராது - பாதுகாப்புத்துறை மந்திரி ராஜ்நாத் சிங் பேச்சு

    தானும் ஒரு விவசாயி தான் என்றும் குறைந்தபட்ச ஆதார விலை நடைமுறை முடிவுக்கு வராது எனவும் பாதுகாப்புத்துறை மந்திரி ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார்.
    புதுடெல்லி:

    விவசாயிகளுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் வகையில் உள்ள வேளாண் மசோதாக்களை குரல் வாக்கெடுப்பு மூலம் நிறைவேற்றக்கூடாது என்றும் மசோதாக்கள் தேர்வுக்குழுவுக்கு அனுப்பப்பட்டு முழுமையான ஆய்வுக்கு பின்னரே அமல்படுத்தப்பட வேண்டும் என எதிர்க்கட்சிகள் சார்பில் கோரிக்கை விடப்பட்டது. 

    ஆனால், விவசாயிகள், எதிர்க்கட்சிகளின் கடுமையான எதிர்ப்புக்கு மத்தியில் வேளாண் மசோதாக்கள் குரல் வாக்கெடுப்பு மூலம் மாநிலங்களவையில் இன்று நிறைவேற்றப்பட்டது. 

    இதற்கிடையில், மசோதா தொடர்பான விவாதத்தின்போது எதிர்கட்சி உறுப்பினர்கள் அமலியில் ஈடுபட்டனர். சில உறுப்பினர்கள் மாநிலங்களவை துணைத்தலைவரின் இருக்கையை முற்றுகையிட்டும் தங்கள் எதிர்ப்பை வெளிப்படுத்தினர்.

    இந்நிலையில், மாநிலங்களவையில் நிறைவேற்றப்பட்ட வேளாண் மசோதா தொடர்பாக மத்திய மந்திரிகள் சிலர் கூட்டாக செய்தியாளர்கள் சந்தித்தனர். அந்த சந்திப்பின்ப்போது பாதுகாப்புத்துறை மந்திரி ராஜ்நாத் சிங் கூறியதாவது:-

    ராஜ்யசபாவில் இன்று எதிர்க்கட்சிகளின் செயல் சோகமும், துரதிர்ஷ்டவசமும், வெட்கக்கேடுமானது. அவைவில் விவாதங்களில் பங்கெடுப்பது ஆளும் கட்சியின் பொறுப்பு. அதேபோல் நல்லொழுக்கத்தை பராமரிப்பது எதிர்க்கட்சியின் கடமை. 

    லோக் சபா, ராஜ்ய சபா வரலாற்றில் இதுபோன்ற நிகழ்வு இதுவரை நடைபெறவில்லை. ராஜ்ய சபாவில் இன்று நடைபெற்ற நிகழ்வு மிகப்பெரிய விஷயம். வதந்திகளின் அடிப்படையில் விவசாயிகளை திசைதிருப்ப முயற்சிகள் நடைபெற்றுள்ளது. இன்று நடைபெற்ற சம்பவம் அவைகளின் ந்ல்லொழுக்கத்திற்கு எதிரான ஒன்று.

    மாநிலங்களவை துணைத்தலைவருக்கு எதிராக நோட்டீஸ் கொடுக்கப்பட்டுள்ளது. இது குறித்த முடிவை அவரே எடுப்பார். நான் இதை அரசியலாக்க விரும்பவில்லை. அது மாநிலங்களவை துணைத்தலைவரின் தனிப்பட்ட உரிமை . 

    வேளாண் மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜக கூட்டணியில் இருந்த சிரோண்மணி அகாலி தள கட்சியை சேர்ந்த மத்திய மந்திரி ஹர்சிம்ரத் கவுர் பாதல் தனது பதவியை ராஜினாமா செய்தது தொடர்பாக நான் கருத்து கூறவில்லை. ராஜினாமா போன்ற முடிவுகளின்போது குறிப்பிட்ட சில அரசியல் காரணங்கள் இருக்கலாம்.

    நானும் ஒரு விவசாயி தான், குறைந்தபட்ச ஆதார விலை நடைமுறை, வேளாண் பொருள் சந்தை கமிட்டி நடைமுறை முடிவுக்கு வராது.

    என்றார்.    
    Next Story
    ×