search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    அமளியில் ஈடுபட்ட உறுப்பினர்கள்
    X
    அமளியில் ஈடுபட்ட உறுப்பினர்கள்

    வேளாண் மசோதாக்களுக்கு எதிராக எதிர்க்கட்சிகள் கடும் அமளி -மாநிலங்களவை ஒத்திவைப்பு

    வேளாண் மசோதாக்கள் மீதான விவாதத்தை நீட்டிக்க வலியுறுத்தி மாநிலங்களவையில் எதிர்க்கட்சி எம்பிக்கள் அமளியில் ஈடுபட்டனர்.
    புதுடெல்லி:

    மாநிலங்களவையில் இன்று எதிர்க்கட்சிகளின் கடும் எதிர்ப்புக்கு மத்தியில் வேளாண் மசோதாக்கள் தாக்கல் செய்யப்பட்டன. மசோதாக்கள் மீது விவாதம் நடந்தபோது, எதிர்க்கட்சி உறுப்பினர்கள், மசோதாவில் உள்ள பாதகமான அம்சங்கள் குறித்து விளக்கி, தங்கள் எதிர்ப்பை பதிவு செய்தனர். காரசாரமாக நீடித்த இந்த விவாதம் மதியம் வரை நீடித்தது.

    அதன்பின்னர், விவாதத்திற்கு பதிலளித்து வேளாண் மந்திரி நரேந்திர சிங் தோமர் பேசத் தொடங்கினார். அப்போது விவாதத்தை இன்றுடன் முடித்துக்கொள்ளக்கூடாது, நாளையும் நீட்டிக்க வேண்டும் என்றும், வேளாண் மந்திரியின் பதிலுரையை ஒத்திவைக்க வேண்டும் என்றும் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் வலியுறுத்தி அமளியில் ஈடுபட்டனர். 

    நாளையும் விவாதத்தை நீட்டிப்பதற்கு பெரும்பாலான எம்பிக்கள் ஆதரவாக இருப்பதாக எதிர்க்கட்சி தலைவர் குலாம் நபி ஆசாத் தெரிவித்தார். ஆளும் கட்சியின் எண்ணிக்கையால் அல்லாமல், ஒட்டுமொத்த உறுப்பினர்களின் ஒருமித்த கருத்துப்படி நாம் செல்ல வேண்டும் என்றும் அவர் கூறினார். ஆனால் எதிர்க்கட்சிகளின் கோரிக்கை குரல் வாக்கெடுப்பு மூலம் நிராகரிக்கப்பட்டது. 

    இதனால் கடும் அதிருப்தி அடைந்த எதிர்க்கட்சி உறுப்பினர்கள் அமளியை தொடர்ந்தனர். அவையின் மையப்பகுதிக்கு வந்ததுடன்,  அவைத் துணைத்தலைவரின் இருக்கையை முற்றுகையிட்டு முழக்கமிட்டனர். அவை விதிமுறைகள் அடங்கிய புத்தகம் உள்ளிட்ட காகிதங்களை கிழித்து வீசினர். இதனால் அவையில் கூச்சல் குழப்பம் ஏற்பட்டது. இந்த அமளிக்கிடையே மாநிலங்களவை ஒத்திவைக்கப்பட்டது.
    Next Story
    ×