search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கோப்புப்படம்
    X
    கோப்புப்படம்

    கர்நாடகாவில் நெகிழ்ச்சி சம்பவம் - இந்து கோவில் கட்ட இடம் வழங்கிய முஸ்லிம் குடும்பம்

    கர்நாடக மாநிலம் சிவமொக்காவில் இந்து கோவில் கட்டுவதற்கு முஸ்லிம் குடும்பம் ஒன்று இடம் வழங்கிய நெகிழ்ச்சி சம்பவம் நடந்துள்ளது.
    பெங்களூரு:


    சிவமொக்கா டவுன் ஜோகா ரோடு பகுதியில் மொய்தீன் தவக்கல் என்பவரின் குடும்பத்துக்கு சொந்தமான 875 சதுர அடி பரப்பளவில் இடம் உள்ளது. அந்த இடத்தில் அதேப்பகுதியை சேர்ந்த பசப்பா என்பவரின் மகன் உமேஷ், லட்சுமணா என்பவரின் மகன் கோவிந்தா, ராமண்ணாவின் மகன் ரவிசந்திரா ஆகியோர் ஒரு கல்லை வைத்து வழிபட்டு வந்துள்ளனர்.

    இந்த நிலையில், மழை காரணமாக அந்தப்பகுதியில் வழிபட முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதன்காரணமாக மொய்தீன் தவக்கல் குடும்பத்தினர் தங்களது நிலத்தை, கோவில் கட்டுவதற்காக அவர்கள் 3 பேரிடமும் கொடுக்க முடிவு செய்தனர். அதன்படி, மொய்தீன் தவக்கல் குடும்பத்தின் 2-வது தலைமுறையை சேர்ந்த ஹசன், காதர் மற்றும் 3-வது தலைமுறையை சேர்ந்த கரீம், ரபீக் ஆகியோர் தங்களது நிலத்தை இந்து கோவில் கட்டுவதற்கு வழங்க சம்மதித்தனர். இதையடுத்து முஸ்லிம் குடும்பத்தினர், இந்து கோவில் கட்டுவதற்காக அந்த நிலத்தை உமேஷ், கோவிந்தா, ரவிசந்திரா ஆகியோரிடம் ஒப்படைத்தனர். இதனால், அங்கு இந்து கோவிலை கட்ட அவர்கள் முடிவு செய்துள்ளனர்.

    இந்து கோவில் கட்டுவதற்காக முஸ்லிம் குடும்பத்தினர் தங்களது நிலத்தை ஒப்படைத்தது அந்தப்பகுதி மக்களிடையே நெகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
    Next Story
    ×