search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கைது
    X
    கைது

    பெங்களூருவில் போதைப்பொருள் விற்ற 2 வாலிபர்கள் கைது

    பெங்களூருவில் போதைப்பொருள் விற்ற 2 வாலிபர்களை போலீசார் கைது செய்தனர். அவர்களிடமிருந்து ரூ.4 லட்சம் மதிப்பிலான போதை மாத்திரைகள் பறிமுதல் செய்யப்பட்டது.
    பெங்களூரு:

    பெங்களூரு அசோக்நகர் போலீசார் தங்கள் எல்லைக்கு உட்பட்ட எம்.ஜி.ரோட்டில் நேற்று காலையில் சந்தேகப்படும் படியாக காரில் சுற்றித்திரிந்த 2 வாலிபர்களை பிடித்து சோதனை நடத்தினார்கள். அப்போது காரில் போதை மாத்திரைகள், போதைப்பொருட்கள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து, அந்த காரில் இருந்த 2 வாலிபர்களும் கைது செய்யப்பட்டனர். விசாரணையில், அவர்கள் கொத்தனூரை சேர்ந்த ஜான் நிகோலஷ் (வயது 21), ஜே.பி.நகரை சேர்ந்த இர்பான் சேக் (29) என்பதும், 2 பேரும் போதைப்பொருள் விற்கும் கும்பலிடம் இருந்து எல்.எஸ்.டி, எம்.டி.எம்.ஏ. ஆகிய போதை மாத்திரைகளை வாங்கி விற்பனை செய்ததும் தெரியவந்தது.

    மேலும் அவர்கள் போதைப்பொருட்களை ஜெல்லி மிட்டாய் போன்று தயாரித்து விற்றதும் தெரியவந்தது. அவர்களிடம் இருந்து ரூ.4 லட்சம் மதிப்பிலான போதைப்பொருட்கள் மற்றும் போதை மாத்திரைகள் பறிமுதல் செய்யப்பட்டது. கைதான 2 பேர் மீதும் அசோக்நகர் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

    இதேபோல் ராமநகர் மாவட்டம் சென்னபட்டணா தாலுகா அக்கூரில் கஞ்சா விற்பனை செய்த வாலிபரை அக்கூர் போலீசார் கைது செய்து விசாரித்தனர். விசாரணையில், அவர் சிங்கராஜபுரா கிராமத்தை சேர்ந்த புட்டசாமி (30) என்று தெரியவந்தது.

    இவர், கஞ்சா விற்கும் கும்பலிடம் இருந்து குறைந்த விலைக்கு கஞ்சாவை வாங்கி கூடுதல் விலைக்கு விற்று வந்துள்ளார். மேலும் அவர் தனது தோட்டத்திலும் கஞ்சா பயிரிட்டு வளர்த்து விற்று வந்தது தெரியவந்தது. கைதான புட்டசாமியிடம் இருந்து 23 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது. அவர் மீது அக்கூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    Next Story
    ×