search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஜம்மு காஷ்மீரின் டி.ஜி.பி. தில்பாக் சிங்
    X
    ஜம்மு காஷ்மீரின் டி.ஜி.பி. தில்பாக் சிங்

    காஷ்மீரில் புதிய பயங்கரவாத குழுக்களை உருவாக்க பாகிஸ்தான் முயற்சி

    காஷ்மீரில் பாகிஸ்தான் அமைப்புகள் பழைய பயங்கரவாத போராட்ட குழுவான அல்-பத்ர் அமைப்பை உருவாக்கும் சூழ்ச்சி வேலைகளை செய்வதாக ஜம்மு காஷ்மீரின் டி.ஜி.பி. தில்பாக் சிங் தெரிவித்தார்.
    ஸ்ரீநகர்:

    ஜம்மு காஷ்மீரின் டி.ஜி.பி. தில்பாக் சிங் நேற்று நிருபர்களை சந்தித்தபோது, “பாகிஸ்தான் அமைப்புகள் பழைய பயங்கரவாத போராட்ட குழுவான அல்-பத்ர் அமைப்பை புதுப்பித்தல் மற்றும் புதிய போராட்ட குழுக்களை உருவாக்கும் சூழ்ச்சி வேலைகளை செய்வதாக” குற்றம் சாட்டினார். கராச்சியில் இதற்கான திட்டத்தை பாகிஸ்தான் ஏஜென்சிகள் உருவாக்கி வருவதாக சமீபத்தில் தகவல்கள் வெளியாகின என்று அவர் கூறினார்.

    “காஷ்மீர் பள்ளத்தாக்கில் உயிர்ச்சேதங்களை விளைவிக்கும், இளைஞர்களை திசைதிருப்பி அழிக்கும் முயற்சியில் பாகிஸ்தான் ஈடுபாடு காட்டுகிறது என்பதில் சந்தேகமில்லை. அவர்கள் எங்கள் இளைஞர்களின் வளர்ச்சியில் தலையிடுவதை நாங்கள் பொறுத்துக்கொள்ள மாட்டோம்” என்று உறுதிபட தெரிவித்தார். பாதுகாப்பு படையினர் இந்த ஆண்டில் மட்டும் ஜம்மு காஷ்மீரில் 77 ஆபரேஷன்களை மேற்கொண்டு 177 பயங்கரவாதிகளை கொன்றுள்ளனர்.

    இதில் பலர் பல்வேறு பயங்கரவாத பிரிவுகளின் உயர் தளபதிகளாவர். இவர்களில் 22 பேர் பாகிஸ்தானை சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. பெரும்பாலான பயங்கரவாதிகள் ஜெய்ஸ்-இ-முகமது மற்றும் லஸ்கர்-இ-தொய்பா பயங்கரவாத அமைப்பை சேர்ந்தவர்கள் ஆவர்.
    Next Story
    ×