search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    மாநிலங்களவையில் பேசிய பாதுகாப்புத் துறை மந்திரி ராஜ்நாத் சிங்
    X
    மாநிலங்களவையில் பேசிய பாதுகாப்புத் துறை மந்திரி ராஜ்நாத் சிங்

    எல்லையில் அத்துமீறல் முயற்சிகளை கைவிடாவிட்டால்... சீனாவுக்கு ராஜ்நாத் சிங் எச்சரிக்கை

    சீனா ஒப்பந்தத்தின்படி செயல்பட்டால் எல்லையில் அமைதியை நிலைநாட்ட முடியும் என மாநிலங்களவையில் ராணுவ மந்திரி ராஜ்நாத் சிங் பேசினார்.
    புதுடெல்லி:

    இந்தியா-சீனா எல்லை பிரச்சினை, எல்லையில் சீன ஆக்கிரமிப்பு குறித்து மாநிலங்களவையில் பாதுகாப்புத் துறை மந்திரி ராஜ்நாத் சிங் இன்று அறிக்கை தாக்கல் செய்தார். அப்போது அவர் பேசியதாவது:-

    இந்திய எல்லைப் பகுதியில் பல இடங்களை சீனா ஆக்கிரமிப்பு செய்துள்ளது. இந்திய ராணுவத்தை ஆத்திரமூட்டும் நடவடிக்கைகளிலும் ஈடுபடுகிறது. எல்லையில் அமைதி நிலவ வேண்டும் என்றே இரு நாடுகளும் விரும்புகிறோம். எல்லை வரையறை செய்வது குறித்து இரு நாடுகளும் பலமுறை பேச்சுவார்த்தை நடத்தியுள்ளது.

    அதேசமயம் எல்லையில் அத்துமீறல் முயற்சிகளை சீனா கைவிடாவிட்டால் இந்தியா கடுமையான நடவடிக்கை எடுக்க தயங்காது. எத்தனை வலிமையான, எத்தனை கடுமையான நடவடிக்கையையும் எடுக்க தயங்காது. 

    நமது நாட்டை யாரையும் ஆக்கிரமிக்க விடமாட்டோம். சீனா ஒப்பந்தத்தின்படி செயல்பட்டால் எல்லையில் அமைதியை நிலைநாட்ட முடியும். ஆனால் சீனாவின் நடவடிக்கைகள் இருதரப்பு ஒப்பந்தங்களை புறக்கணிப்பதையே பிரதிபலிக்கின்றன.

    இவ்வாறு அவர் பேசினார்.

    ராஜ்நாத் சிங் பேசி முடித்ததும் மாநிலங்களவையின் இன்றைய அலுவல் நிறைவடைந்தது. நாளை காலை 9 மணிக்கு அவை ஒத்திவைக்கப்பட்டது.

    Next Story
    ×