search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பாராளுமன்றம் (கோப்பு படம்)
    X
    பாராளுமன்றம் (கோப்பு படம்)

    ரூ.861 கோடி செலவில் புதிய பாராளுமன்ற கட்டிடம் கட்டுவதற்கான ஒப்பந்தத்தை கைப்பற்றியது டாடா நிறுவனம்

    861 கோடி ரூபாய்க்கு புதிய பாராளுமன்ற கட்டிடம் கட்டுவதற்கான ஒப்பந்தத்தை டாடா நிறுவனம் கைப்பற்றியுள்ளது.
    புதுடெல்லி:

    உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாடு என்ற பெருமைக்குரிய இந்தியாவில் பாராளுமன்றத்துக்கு புதிய கட்டிடம் கட்ட வேண்டும், மக்கள் தொகைக்கு ஏற்ப எம்.பி.க்களின் எண்ணிக்கையை அதிகரிக்க வேண்டும் என்ற கோரிக்கைகள் நீண்ட காலமாக எழுந்து வருகிறது.

    தற்போதுள்ள பாராளுமன்ற கட்டிடம் 1927-ம் ஆண்டு கட்டப்பட்டது. இதில் பாராளுமன்ற அலுவலகம, மக்களவை, மாநிலங்கள் அவை, கட்சி மற்றும் எம்.பி.க்கள் அலுவலகம் போன்றவற்றுக்கு இடம் போதவில்லை.

    இதையடுத்து, புதிய பாராளுமன்றம் கட்ட திட்டம் தீட்டப்பட்டுள்ளது. முக்கோண வடிவில் அமைய உள்ள புதிய பாராளுமன்ற கட்டிடம், தற்போதுள்ள பாராளுமன்ற வளாகத்துக்கு அருகே அமையும்.

    புதிதாக அமைய உள்ள பாராளுமன்ற கட்டிடம் 2 ஆண்டுகளில் கட்டி முடிக்கப்பட்டிக்க திட்டமிடப்பட்டுள்ளது. மேலும், 2022-ம் ஆண்டு பாராளுமன்ற கூட்டம் அந்த புதிய கட்டிடத்தில் நடைபெறும் என சபாநாயகர் ஓம் பிர்லா ஏற்கனவே தெரிவித்திருந்தார்.

    இதையடுத்து, புதிய பாரளுமன்ற கட்டிடம் கட்டுவதற்கான ஒப்பந்த புள்ளிகள் கோரப்பட்டன. இந்த கட்டிடத்தை கட்டுவதற்கான டெண்டரை கைப்பற்றுவதில் டாடா, டியுபுரோ அண்ட் லெர்சென் ஆகிய நிறுவனங்கள் போட்டியிட்டன.

    இந்நிலையில், இந்த கட்டிடத்தை கட்டுவதற்காக ஆகும் மொத்த செலவுத்தொகை குறித்து இந்த மூன்று நிறுவனங்களும் தங்கள் மதிப்பீட்டு தொகையை மத்திய அரசிடம் அளித்தன. மத்திய அரசு இந்த கட்டிடத்தை கட்ட 940 கோடி ரூபாய் செலவாகும் என மதிப்பிட்டிருந்தது. 

    டெண்டரில் டியுபுரோ அண்ட் லெர்சென் நிறுவனம் புதிய பாராளுமன்ற கட்டிடத்தை 865 கோடி ரூபாய்க்கு கட்டித்தருவதாக தங்கள் ஒப்பந்த புள்ளியில் தெரிவித்திருந்தது. ஆனால், டாடா நிறுவனம் புதிய பாரளுமன்ற கட்டிடத்தை 861.90 கோடி ரூபாயில் கட்டித்தருவதாக தனது ஒப்பந்தப்புள்ளியில் தெரிவித்திருந்தது.

    இதையடுத்து, குறைவான தொகையில் (861.90 கோடி ரூபாய்) புதிய பாராளுமன்ற கட்டிடத்தை கட்டித்தருவதாக ஒப்பந்தப்புள்ளியை வழங்கிய டாட்டா ப்ராஜெக்ட் லிமிட்டெட் நிறுவனத்திற்கு கட்டிடம் கட்ட ஒப்பந்தம் வழங்கப்படுவதாக மத்திய அரசு அறிவித்துள்ளது.     

    Next Story
    ×