search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    வைரல் வீடியோ ஸ்கிரீன்ஷாட்
    X
    வைரல் வீடியோ ஸ்கிரீன்ஷாட்

    தமிழக காரில் பாகிஸ்தான் கொடி? வைரலாகும் வீடியோ

    தமிழக காரில் பாகிஸ்தான் கொடி என நினைத்து பெங்களூரு போலீஸ் மேற்கொண்ட நடவடிக்கையின் வீடியோ வைரலாகி வருகிறது.

    தமிழக பதிவு எண் கொண்ட காரில் பாகிஸ்தான் கொடி இருப்பதை கர்நாடக போலீசார் அகற்றியதாக கூறி வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. 43 நொடிகள் ஓடும் வீடியோவில் தமிழக காரில் இருந்த கொடியை எடுத்துவிட்டு இந்திய தேசிய கொடியை ஏற்றியதாக வைரல் பதிவுகளில் கூறப்பட்டு இருக்கிறது.

    வைரல் பதிவுகளை ஆய்வு செய்ததில் தமிழக காரில் இருப்பது பாகிஸ்தான் கொடி இல்லை என தெரியவந்துள்ளது. வீடியோவை உற்று நோக்கினால் அதில் இருப்பது முஸ்லீம் லீக் கட்சியின் கொடி என்பதை அறிந்து கொள்ள முடியும்.

     வைரல் பதிவு ஸ்கிரீன்ஷாட்

    அந்த வகையில் வைரல் வீடியோவில் கர்நாடக போலீசார் நீக்கிய கொடி உண்மையில் பாகிஸ்தான் நாட்டு கொடி இல்லை என்பது உறுதியாகிறது. இந்தியாவில் முஸ்லீம் லீக் கட்சி மற்றும் இதர முஸ்லீம் அமைப்புகள் பெரும்பாலும் பச்சை நிறத்தில் பிறை நட்சத்திரம் பொறிக்கப்பட்ட கொடியை பயன்படுத்துகின்றன.

    இதுவே கர்நாடக போலீசாரை குழப்பத்தில் ஆழ்த்தியிருக்கிறது. மேலும் இந்த சம்பவமும் சமூக வலைதளங்களில் வைரலாக காரணமாக அமைந்து இருக்கிறது. 

    போலி செய்திகளை பரப்பாதீர்கள். போலி செய்திகளால் பல்வேறு பாதிப்புகள் ஏற்படுகின்றன. சமயங்களில் போலி செய்தி பாதிப்பு காரணமாக உயிரிழப்புகளும் ஏற்பட்டு இருக்கின்றன.
    Next Story
    ×