search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    வெங்கையா நாயுடு
    X
    வெங்கையா நாயுடு

    எந்த மொழியையும் திணிக்கவோ, எதிர்க்கவோ கூடாது - வெங்கையா நாயுடு வலியுறுத்தல்

    எந்த மொழியையும் திணிக்கவோ, எதிர்க்கவோ கூடாது என்று துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு வலியுறுத்தியுள்ளார்.
    புதுடெல்லி:

    இந்தி திவாஸ் - 2020-ஐ முன்னிட்டு மதுபன் புத்தக நிறுவனம் ஏற்பாடு செய்த இணைய வழி கருத்தரங்கில் துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு கலந்து கொண்டு பேசியதாவது:-

    நமது அனைத்து மொழிகளும் வளமான வரலாற்றை கொண்டுள்ளது. நமது மொழிகளின் பன்முகத்தன்மை மற்றும் கலாச்சார பாரம்பரியத்தை எண்ணி நாம் பெருமைப்பட வேண்டும்.

    தென்னிந்திய இந்தி பிரசார சபையை மகாத்மா காந்தி 1918ம் ஆண்டு ஏற்படுத்தினார். மக்களிடையே நல்லெண்ணம், அன்பு மற்றும் பாசத்தை அதிகரிக்க, இந்தி பேசாத மாநிலங்களைச் சேர்ந்த மாணவர்கள் இந்தி கற்க வேண்டும் என்றும், இந்தி பேசும் மாநிலங்களைச் சேர்ந்த மாணவர்கள் தமிழ், தெலுங்கு, கன்னடம் போன்ற ஏதாவது ஒரு மொழியை கற்க வேண்டும்.

    ஒருங்கிணைந்த கல்விக்கு, தாய்மொழியில் கல்வி கற்பிக்கப்பட வேண்டும். இது பாடத்தை குழந்தைகள் புரிந்து கொண்டு படிக்கவும், சிறப்பாக வெளிப்படுத்த உதவும்.

    இவ்வாறு அவர் கூறினார்.
    Next Story
    ×