search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    முதல்மந்திரி உத்தவ் தாக்கரே
    X
    முதல்மந்திரி உத்தவ் தாக்கரே

    நான் அமைதியாக இருப்பதால் என்னிடம் பதில் இல்லை என்று அர்த்தம் அல்ல - மகாராஷ்டிரா முதல்மந்திரி உத்தவ் அதிரடி

    நான் அமைதியாக இருப்பதால் என்னிடம் பதில் இல்லை என்று அர்த்தம் அல்ல என மகாராஷ்டிரா முதல்மந்திரி உத்தவ் தாக்கரே தெரிவித்துள்ளார்.
    மும்பை:

    மகாராஷ்டிர மாநிலத்தில் கடற்படையில் பணியாற்றி ஓய்வு பெற்ற மதன் சர்மா என்பவரின் வீட்டுக்குள் புகுந்த ரவுடிகள் அவரை இழுத்து சரமாரியாக அடித்து உதைக்கும் காட்சி கண்காணிப்பு கேமராவில் பதிவாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    முதலமைச்சர் உத்தவ் தாக்கரேயில் கேலி சித்திரத்தை பதிவிட்டு அவரை விமர்சித்து சமூக ஊடகத்தில் வெளியான பதிவை வாட்ஸ்அப்பில் பகிர்ந்ததற்காக சிவசேனா கட்சி நிர்வாகிகள் அவரை தாக்கியதாக கூறப்படுகிறது. 

    இந்த சம்பவம் தொடர்பாக 6 பேர் கைது செய்யப்பட்டு ஜாமீனில் விடுதலை செய்யப்பட்டனர். இந்த விவகாரம் தொடர்பாக சிவசேனா தலைமையினான உத்தவ் தாக்கரே அரசை எதிர்கட்சியான பாஜக கடுமையாக விமர்சனம் செய்து வருகிறது.

    இதற்கிடையில், மும்பையை பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் போல உணருவதாகவும், மும்பை போலீசாரை மாபியாக்களுடன் ஒப்பிட்டும் நடிகை கங்கனா ரணாவத் சர்ச்சையை கிளப்பினார்.

    மேலும், அவர் முதல் மந்திரி உத்தவ் தாக்கரே மீதும் மகாராஷ்டிரா அரசு மீதும் கடுமையான விமர்சனங்களை முன்வைத்தார்.

    இந்த பரபரப்பு அடங்குவதற்குள் நடிகை கங்கனா ரணாவத்தின் மும்பை அலுவலகத்தின் சில பகுதிகள் சட்டவிரோதமாக கட்டப்பட்டிருப்பதாக மும்பை மாநகராட்சி அதிகாரிகள் அந்த கட்டிடத்தின் பகுதியை இடித்து தள்ளினர். மேலும், கங்கனா மகாராஷ்டிரா மாநிலம் வர கடும் கண்டனங்கள் எழுந்தது. ஆனால், கங்கனாவுக்கு இமாச்சலபிரதேச அரசு ’ஒய் பிளஸ்’ பாதுகாப்பு வழங்கியது.

    இந்த ’ஒய் பிளஸ்’ பாதுகாப்பு படைக்கான செலவை மாநில அரசு ஏற்குமா? அல்லது கங்கனா ரணாவத் ஏற்பாரா? என்ற தகவல் வழங்கப்படவில்லை. எதிர்ப்புக்கு மந்தியில் சிறப்பு பாதுகாப்பு படையினரின் பாதுகாப்புடன் கடந்த சில நாட்களுக்கு முன்னர் கங்கனா ரணாவத் மகாராஷ்டிரா மாநிலம் வந்தடைந்தார். 

    ’ஒய் பிளஸ்’ பாதுகாப்பில் கங்கனா ரணாவத்

    இதற்கிடையில், மாகாராஷ்டிராவில் சட்டம் மற்றும் ஒழுங்கை கவனிக்க முடியவில்லை என்றால் முதல் மந்திரி உத்தவ் தாக்கரே பதவி விலக வேண்டும் என ரவுடிகளால் தாக்கப்பட்ட ஓய்வு பெற்ற கடற்படை வீரர் மதன் சர்மா விமர்சனம் செய்தார். இந்த சம்பவங்களால் மகாராஷ்டிர முதல்மந்திரி உத்தவ் தாக்கரேவின் அரசுக்கு அழுத்தம் கொடுக்கப்பட்டு வந்தது.

    இந்நிலையில், பாஜக, கங்கனா ரணாவத், கடற்படை வீரர் விவகாரம் உள்ளிட்ட பல்வேறு விவகாரங்களுக்கு மகாராஷ்டிர முதல்மந்திரி உத்தவ் தாக்கரே இன்று பதிலடி கொடுத்துள்ளார்.

    இது தொடர்பாக உத்தவ் கூறுகையில்,’ மகாராஷ்டிராவில் கொரோனா வைரஸ் தொற்றை கட்டுப்படுத்த ‘எனது குடும்பம் எனது பொறுப்பு’ என்ற திட்டத்தை மாநிலத்தில் தொடங்கியுள்ளோம். 

    கொரோனா வைரஸ் போய்விட்டது என நினைத்துக்கொண்டு சிலர் தங்கள் அரசியலை மீண்டும் தொடங்கி விட்டனர். நான் அரசியல் பேசப்போவதில்லை. ஆனால் மகாராஷ்டிர மாநிலத்தை இழிவுபடுத்த சதி நடைபெற்றுக்கொண்டிருக்கிறது. நான் அமைதியாக இருப்பதால் என்னிடம் பதில் இல்லை என்று அர்த்தம் அல்ல’ என்றார்.

    Next Story
    ×