search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ராகுல் காந்தியுடன் சச்சின் பைலட்
    X
    ராகுல் காந்தியுடன் சச்சின் பைலட்

    நாட்டை அதல பாதாளத்தில் தள்ளிய மோடி அரசு... ராகுல் கருத்திற்கு சச்சின் பைலட் ஆதரவு

    கொரோனா வைரசுக்கு எதிரான மோடி அரசின் ‘நன்கு திட்டமிடப்பட்ட போர்’ இந்தியாவை அதலபாதாளத்தில் தள்ளிவிட்டிருப்பதாக ராகுல் காந்தி விமர்சித்துள்ளார்.
    புதுடெல்லி:

    தேசிய புள்ளியியல் அலுவலகம் கடந்த வாரம் வெளியிட்ட ஆய்வறிக்கையில் நடப்பு நிதியாண்டின் முதல் காலாண்டில் நாட்டின் பொருளாதாரம் 23.9 சதவீதம் அளவுக்கு வீழ்ச்சி அடைந்ததாக தெரிவிக்கப்பட்டிருந்தது. இதனையடுத்து மத்திய அரசின் மீது காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவரும் எம்.பி.யுமான ராகுல் காந்தி அடுக்கடுக்கான விமர்சனங்களை முன்வைத்து வருகிறார். பொருளாதார வீழ்ச்சிக்கு காரணமாவை என்ற தலைப்பில் 4 வீடியோக்களை தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டு வருகிறார்.

    இதற்கிடையே மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா சமீபத்தில் ஒரு நிகழ்ச்சியில் பேசும்போது, கொரோனாவுக்கு எதிராக இந்தியா பிரதமர் மோடியின் தலைமையில் திட்டமி்ட்டு போர் புரிந்து வருவதாக கூறினார். 

    இதற்கு பதில் அளிக்கும் விதத்தில் ராகுல் காந்தி இன்று ட்விட்டரில் தனத கருத்தை பதிவிட்டுள்ளார். அதில் கூறியிருப்பதாவது:-

    கொரோனா வைரசுக்கு எதிரான மோடி அரசின் ‘நன்கு திட்டமிடப்பட்ட போர்’ இந்தியாவை அதலபாதாளத்தில் தள்ளிவிட்டுள்ளது. வரலாற்றில் இல்லாத அளவுக்கு 24 சதவீதம் பொருளாதார வீழ்ச்சி அடைந்துள்ளது. 12 கோடி வேலையிழப்புகள், 15.5 லட்சம் கோடி கூடுதல் வாராக்கடன் உள்ளன. உலகிலேயே இந்தியாவில்தான் நாள்தோறும் கொரோனாவில் பாதிக்கப்படுவோரும், இறப்போரும் அதிகமாக உள்ளனர். ஆனால், மத்திய அரசும், ஊடகங்களும் அனைத்தும் சிறப்பாக இருப்பதாக சொல்கின்றன.

    இவ்வாறு ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.

    ராகுல் காந்தியின் கருத்தை சச்சின் பைலட் ஆதரித்துள்ளார். ‘ராகுல் காந்தி எழுப்பிய பிரச்சினைகள் நியாயமானவை. நாடு ஒரு பொருளாதார நெருக்கடியை எதிர்கொள்கிறது, தொழில்கள் மூடப்பட்டு வருகின்றன, 2.10 கோடி மக்கள் வேலை இழந்துள்ளனர், சம்பளம் குறைக்கப்படுகிறது, மறுபுறம், சீனா நமது எல்லைக்குள் நுழைகிறது’ என சச்சின் பைலட் கூறினார். 

    இந்தியாவிற்கும் சீனாவிற்கும் இடையிலான எல்லை பதற்றத்திலிருந்து மக்களின் கவனத்தைத் திசைதிருப்ப மற்ற பிரச்சினைகள் பேசப்படுவதாகவும் பைலட் கூறினார்.
    Next Story
    ×