search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    இந்தியா, சீனா வெளியுறவு மந்திரிகள் சந்திப்பு
    X
    இந்தியா, சீனா வெளியுறவு மந்திரிகள் சந்திப்பு

    எல்லையில் பதற்றத்தை தணிக்க இந்தியா-சீனா இடையே 5 அம்சத் திட்டத்திற்கு ஒப்புதல்

    இந்தியா, சீனா வெளியுறவு மந்திரிகள் மாஸ்கோவில் சந்தித்தபோது எல்லை பதற்றங்களை தணிப்பதற்கான 5 அம்சத் திட்டத்துக்கு ஒப்புதல் தெரிவித்துள்ளனர்.
    புதுடெல்லி:

    லடாக் எல்லையில் கல்வான் பள்ளத்தாக்கு பகுதியில் கடந்த ஜூன் 15-ந் தேதி இந்தியா-சீனா படைகளிடையே மோதல்டு ஏற்பட்டது. இந்த மோதலில் 20 இந்திய வீரர்கள் வீர மரணம் அடைந்ததைத் தொடர்ந்து எல்லை நிலைமை மேலும் மோசமானது. இரு தரப்பும் படைகளை குவித்ததால் பதற்றம் அதிகரித்தது. இதனையடுத்து பதற்றத்தை தணிக்க தொடர்ந்து பேச்சுவார்த்தை நடைபெறுகிறது.

    அவ்வகையில், ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் வெளியுறவு மந்திரிகள் கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக மாஸ்கோ சென்ற மத்திய வெளியுறவு மந்திரி ஜெய்சங்கர், சீன வெளியுறவு மந்திரி வாங் யியை சந்தித்து பேசினார். இருதரப்பிலும் நடைபெற்ற வெளிப்படையான, ஆக்கப்பூர்வ பேச்சுவார்த்தையின் முடிவில், பதற்றத்தை தணிக்க 5 அம்சத் திட்டத்துக்கு இருநாட்டு மந்திரிகளும் ஒப்புதல் தெரிவித்தனர். இது தொடர்பாக கூட்டறிக்கை வெளியிடப்பட்டது. 

    அதில், ‘எல்லையில் தற்போது உள்ள சூழ்நிலை இருதரப்புக்கும் உகந்ததாக இல்லை. எனவே இருதரப்பு எல்லை படைகளும் தொடர்ந்து பேச்சுவார்த்தையில் ஈடுபட வேண்டும். விரைவில் படைகளை வாபஸ் பெற்று, இருதரப்பினரும் முறையான இடைவெளி கடைப்பிடித்து பதற்றத்தை தணிக்க வேண்டும்.

    ஏற்கெனவே உள்ள ஒப்பந்தங்கள், மரபுகளை பின்பற்றி எல்லைப் பிரச்சினையில் கருத்தொற்றுமை கொண்டு இந்திய - சீன உறவுகளை பலப்படுத்த வேண்டும். வேறுபாடுகள் தகராறுகளாக மாறாமல் தடுக்க வேண்டும். எல்லையில் பதற்றத்தை அதிகரிக்கும் எந்த ஒரு செயலிலும் இருதரப்பினரும் ஈடுபடக்கூடாது’ என்று இருதரப்பினரும் ஒப்புக் கொண்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
    Next Story
    ×