search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ராகுல் காந்தி
    X
    ராகுல் காந்தி

    எல்.ஐ.சி.யின் 25 சதவீத பங்குகள் விற்பனையா? பிரதமர் மோடி மீது ராகுல் பாய்ச்சல்

    எல்.ஐ.சி. என்று அழைக்கப்படுகிற ஆயுள் காப்பீட்டு நிறுவனத்தின் 25 சதவீத பங்குகள் விற்பனையா? என ராகுல் காந்தி கேள்வி எழுப்பியுள்ளார்.
    புதுடெல்லி:

    எல்.ஐ.சி. என்று அழைக்கப்படுகிற ஆயுள் காப்பீட்டு நிறுவனத்தின் 25 சதவீத பங்குகளை விற்பதற்கு மத்திய அரசு திட்டமிட்டுள்ளதாக பத்திரிகை ஒன்றில் தகவல் வெளியாகி உள்ளது.

    காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, இந்த பத்திரிகை செய்தியை தனது டுவிட்டர் கணக்கில் இணைத்து ஒரு பதிவை வெளியிட்டுள்ளார்.

    அந்த பதிவில் அவர், ‘‘அரசு நிறுவனங்களை விற்பதற்கு பிரதமர் மோடி பிரசாரம் செய்து வருகிறார். நாட்டின் பொருளாதாரத்துக்கு சுயமாக உருவாக்கப்பட்ட சரிவை ஈடுசெய்வதற்காக, நாட்டின் சொத்துகள் ஒன்றன் பின் ஒன்றாக விற்பனை செய்யப்படுகின்றன. மக்களின் எதிர்காலத்தையும், நம்பிக்கையையும் பணயம் வைத்து எல்.ஐ.சி.யை விற்பனை செய்வது, மோடி அரசின் மற்றுமொரு வெட்கக்கேடான முயற்சி ஆகும்’’ என குறிப்பிட்டுள்ளார்.
    Next Story
    ×