search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பிரதமர் மோடி
    X
    பிரதமர் மோடி

    சீனாவுடனான எல்லை பிரச்சினை - பிரதமர் மோடி தலைமையில் இன்று மாலை ஆலோசனை கூட்டம்

    சீனாவுடனான எல்லை விவகாரம் பற்றி ஆலோசனை மேற்கொள்ள பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் மந்திரிகளுடனான ஆலோசனை கூட்டம் இன்று மாலை நடைபெறுகிறது.
    புதுடெல்லி:

    இந்தியா- சீனாவுக்கு இடையே சமீப காலமாக எல்லைப் பிரச்சினை அதிகரித்து வருகிறது. அண்மையில் லடாக் பகுதியில் சீன ராணுவம் அத்துமீறியதில் இருந்தே அங்கு பதற்றம் அதிகரித்துள்ளது. இரு நாட்டு ராணுவமும் எல்லையில் படைகளை குவித்துள்ளன.
     
    எல்லையில் ஏற்பட்டுள்ள பதற்றத்தை தணிக்க இருநாட்டு அதிகாரிகள் மட்டத்திலான பேச்சுவார்த்தை நடந்து கொண்டே இருக்கின்றன. எனினும், பதற்றம் தணிந்தபாடில்லை. சீனா தொடர்ந்து அத்துமீறி வருவதால், பதற்றம் அதிகரித்துக்கொண்டே தான் செல்கிறது.

    இதற்கிடையில், லடாக்கில் எல்லைக் கட்டுப்பாட்டு பகுதியை தாண்டி வந்த இந்திய வீரர்கள் பாங்கோங் ஏரி சமவெளி பகுதிகளில், துப்பாக்கிச்சூடு நடத்தியதாக சீன ராணுவம் குற்றம் சாட்டியுள்ளது.

    சீனாவின் இந்த குற்றச்சாட்டை இந்திய ராணுவம், நிராகரித்துள்ளது. இதுகுறித்து இந்திய ராணுவம் கூறுகையில், ஒப்பந்தத்தை அப்பட்டமாக மீறி இந்திய நிலைகளை நோக்கி நெருங்கி வர முயற்சித்ததோடு வானை நோக்கி சீனா துப்பாக்கியால் சுட்டது. ஆனால், உள்நாட்டு, சர்வதேச சமூகங்களை சீனா தனது அறிக்கைகளால் ஏமாற்ற முயற்சிக்கிறது. இந்த பதற்றமான தருணத்திலும் இந்திய ராணுவம் மிகவும் நிதானத்தை கடைப்பிடித்ததோடு, முதிர்ச்சியுடனும் பொறுப்புணர்வுடனும் நடந்து கொண்டது என்று தெரிவித்துள்ளது.

    இந்நிலையில், சீனாவுடனான எல்லை பிரச்சினை குறித்து ஆலோசனை மேற்கொள்ள இன்று மாலை ஆலோசனை கூட்டம் நடைபெறுகிறது.

    பிரதமர் மோடி தலைமையில் நடைபெறும் இந்த கூட்டத்தில், பல்வேறு துறை மந்திரிகள், அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தப்படும். எல்லையில் எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து மோடியிடம் எடுத்துரைக்கப்படும். இரு நாட்டு எல்லை விவகாரத்தில் சுமூக தீர்வு எட்டுவதற்கான ஆலோசனை மேற்கொள்ளப்படும்.
    Next Story
    ×