search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    சீன பாதுகாப்புத்துறை மந்திரியுடன் ராஜ்நாத் சிங் சந்திப்பு
    X
    சீன பாதுகாப்புத்துறை மந்திரியுடன் ராஜ்நாத் சிங் சந்திப்பு

    எல்லையில் சீனாதான் அத்துமீறுகிறது.. படைகளை குவிக்க கூடாது -சீன மந்திரியிடம் ராஜ்நாத் சிங் வலியுறுத்தல்

    இருதரப்பு ஒப்பந்தத்தை மீறி எல்லையில் சீனா படைகளை குவிக்க கூடாது என்று மாஸ்கோவில் நடந்த சந்திப்பின்போது ராஜ்நாத் சிங் வலியுறுத்தியிருக்கிறார்.
    மாஸ்கோ:

    ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பு மாநாட்டில் பங்கேற்பதற்காக ரஷியா சென்றுள்ள இந்திய பாதுகாப்புத்துறை மந்திரி ராஜ்நாத் சிங், சீன பாதுகாப்புத் துறை மந்திரியை மாஸ்கோவில் சந்தித்து பேசினார். இந்த பேச்சுவார்த்தையின்போது எல்லைப் பிரச்சினை குறித்தும், அதற்கான தீர்வுகள் குறித்தும் இருவரும் வெளிப்படையாக பேசினர்.

    இந்த பேச்சுவார்த்தைக்கு பிறகு சீனா வெளியிட்ட அறிக்கையில் லடாக் எல்லையில் நிலவும் பதற்றத்திற்கு இந்தியாதான் காரணம் என்றும், இரு நாடுகளுக்கிடையே பதற்றத்தை அதிகரித்து வருவதாகவும் குற்றம்சாட்டியது. 

    இதற்கு பதில் அளிக்கும் வகையில் இந்திய பாதுகாப்பு அமைச்சகம் அடுத்தடுத்த டுவீட்கள் மூலம் இந்தியாவின் நிலைப்பாட்டை தெளிவுபடுத்தி உள்ளது. பாதுகாப்பு அமைச்சகம் கூறியிருப்பதாவது:-

    சீனா அமைதியாக இருக்க வேண்டும், நிலைமையை சிக்கலாக்கும் அல்லது எல்லைப் பகுதிகளில் பதற்றத்தை அதிகரிக்கக் கூடிய நடவடிக்கைகளை மேற்கொள்ளக்கூடாது.

    எல்லையில் அத்துமீறுவது சீனாதான் என மாஸ்கோ சந்திப்பின்போது பாதுகாப்புத்துறை மந்திரி ராஜ்நாத் சிங் கூறியுள்ளார். படைக் குவிப்பு, ஆத்திரமூட்டும் நடவடிக்கை, எல்லையில் நிலைமையை தன்னிச்சையாக மாற்றும் முயற்சி போன்ற சீனாவின் ஒரு தலைப்பட்சமான நடவடிக்கை இருதரப்பு ஒப்பந்தத்தை மீறுவதாக உள்ளது என்று கூறிய ராஜ்நாத் சிங், இருதரப்பு ஒப்பந்தத்தை மீறி எல்லையில் சீனா படைகளை குவிக்க கூடாது என்று வலியுறுத்தியிருக்கிறார்.

    இந்திய எல்லை மற்றும் இறையாண்மை உறுதியுடன் பாதுகாக்கப்படும். எல்லை பிரச்சினை தொடர்பாக ராஜதந்திர ரீதியாகவும், ராணுவ நிலையிலும் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தி முழு அமைதியை ஏற்படுத்த வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்.  எல்லை நிர்வாகத்தில் இந்திய படை எப்போதும் மிகவும் பொறுப்பான அணுகுமுறையை மேற்கொள்வதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

    இதேபோல் சீன பாதுகாப்பு மந்திரி கூறும்போது, இந்திய பிரதமர் மோடி மற்றும் சீன அதிபர் ஜி ஜின்பிங் ஆகியோர் சந்திப்பின்போது எட்டப்பட்ட ஒருமித்த கருத்தை செயல்படுத்த வேண்டும் என்றும், பேச்சுவார்த்தைகள் மூலம் பிரச்சினைகளைத் தீர்க்க வேண்டும் என்றும் வலியுறுத்தி உள்ளார். இருதரப்பு ஒப்பந்தங்களை கண்டிப்பாக பின்பற்ற வேண்டும், முன்னணி துருப்புக்களின் கட்டுப்பாட்டை வலுப்படுத்த வேண்டும், ஆத்திரமூட்டும் நடவடிக்கைகளை மேற்கொள்ளக்கூடாது என்றும் சீன மந்திரி கூறியிருக்கிறார்.

    இவ்வாறு இந்திய பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது.
    Next Story
    ×