search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    வாலிபர் தாக்கப்பட்ட காட்சி
    X
    வாலிபர் தாக்கப்பட்ட காட்சி

    திருட்டு குற்றச்சாட்டில் வாலிபரை தாக்கி மொட்டையடித்த சம்பவம்- சினிமா தயாரிப்பாளர் கைது

    செல்போன் திருடியதாக கூறி முன்னாள் ஊழியரை அடித்து உதைத்து தலையை மொட்டையடித்த வழக்கில் சினிமா தயாரிப்பாளரை போலீசார் கைது செய்தனர்.
    விசாகப்பட்டினம்:

    ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தில் சினிமா தயாரிப்பாளர் நூதன் நாயுடு வசித்து வருகிறார். இவரது மனைவி பிரியா மாதுரியின் ஐபோனை வீட்டில் வேலை செய்த வாலிபர் திருடிவிட்டதாக குற்றம்சாட்டி உள்ளனர். இது தொடர்பாக அவரை வரவழைத்து விசாரித்தபோது கடுமையாக தாக்கி உள்ளனர். 

    பின்னர் வலுக்கட்டாயமாக அவரது தலையை மொட்டை அடித்துள்ளனர். இந்த சம்பவம் தொடர்பாக பாதிக்கப்பட்ட வாலிபர் அளித்த புகாரின் அடிப்படையில், பிரியா மாதுரி உள்ளிட்ட 7 பேரை போலீசார் கைது செய்தனர். 

    தொடர்ந்து தீவிர விசாரணை நடத்தி வந்த போலீசார், கர்நாடக மாநிலம் உடுப்பியில் தங்கியிருந்த தயாரிப்பாளர் நூதன் நாயுடுவை நேற்று கைது செய்தனர். பின்னர் அவரை கோர்ட்டில் ஆஜர்படுத்தினர். நீதிமன்ற அனுமதி பெற்று அவரை ஆந்திராவுக்கு கொண்டு வர உள்ளதாக விசாகப்பட்டினம் போலீஸ் கமிஷனர் தெரிவித்துள்ளார்.
     
    பாதிக்கப்பட்ட வாலிபர், தயாரிப்பாளரின் வீட்டில் பிப்ரவரி மாதம் முதல் ஆகஸ்ட் 1ம் தேதி வரை வேலை செய்துள்ளார். பின்னர் ஆகஸ்ட் 27ம் தேதி அவரை வீட்டுக்கு வரவழைத்து, ஐபோனை திருடியதாக கூறி விசாரித்துள்ளனர். அப்போது தான் திருடவில்லை என்று அவர் கூறியுள்ளார். மீண்டும் மறுநாள் வீட்டிற்கு அழைத்து கடுமையாக அடித்து உதைத்து, அவமானப்படுத்தி உள்ளனர். அத்துடன் வெளியில் யாரிடமும் சொல்லக்கூடாது என்றும் எச்சரித்துள்ளனர். 

    அந்த வாலிபர் தாக்கப்பட்ட காட்சிகள் வீட்டில் இருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகியிருந்தன. அந்த பதிவுகளை போலீசார் கைப்பற்றி அதன் அடிப்படையில் பல்வேறு பிரிவுகளில் வழக்கு பதிவு செய்திருப்பது குறிப்பிடத்தக்கது.
    Next Story
    ×