search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ராஜ்நாத் சிங்
    X
    ராஜ்நாத் சிங்

    ரஷியா சென்றுள்ள இந்திய ராணுவ மந்திரி ராஜ்நாத் சிங்கை சந்தித்து பேச சீனா வேண்டுகோள்

    ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பு மாநாட்டிற்கு இடையில் இந்திய பாதுகாப்புத்துறை மந்திரி ராஜ்நாத் சிங்கை சந்தித்து பேச சீனா கோரிக்கை வைத்து உள்ளது.
    புதுடெல்லி:

    ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பு (எஸ்சிஓ) மாநாட்டில் கலந்து கொள்வதற்காக இந்திய பாதுகாப்புத்துறை மந்திரி ராஜ்நாத் சிங் சென்று உள்ளார்.  இந்த நிலையில் சீன பாதுகாப்புத்துறை மந்திரி ஜெனரல் வீ ஃபெங் ன் ராஜ்நாத் சிங்கை சந்திக்க கோரிக்கை வைத்து உள்ளார்.

    பாதுகாப்புத்துறை மந்திரிகள் இருவரும் எஸ்சிஓ பாதுகாப்பு மந்திரி மாநாட்டில் கலந்து கொள்ள மாஸ்கோவில் உள்ளனர். இந்தியா, பாகிஸ்தான், சீனா, கஜகஸ்தான், கிர்கிஸ்தான், ரஷியா, தஜிகிஸ்தான் மற்றும் உஸ்பெகிஸ்தான் ஆகியவை எஸ்சிஓ குழுவின் ஒரு பகுதியாகும். 

    சீனாவின் கோரிக்கையை இந்தியா ஏற்றுக் கொள்ளும் என்பது உறுதிப்படுத்தப்படவில்லை என்றாலும், உண்மையான கட்டுப்பாட்டு கோடு பகுதியில் 2 நாடுகளுக்கிடையில் அதிகரித்துள்ள பதற்றங்களுக்கு மத்தியில் இந்த முன்னேற்றம் ஏற்பட்டு உள்ளது.

    கிழக்கு லடாக்கில் உண்மையான கட்டுப்பாட்டு கோட்டில் உள்ள தற்போதைய நிலைமை, சீனாவின் நடவடிக்கைகளால் ஏற்பட்ட நேரடி விளைவு என இந்தியா கூறியுள்ளது.

    வெளியுறவுத்துறை செய்தித் தொடர்பாளர் அனுராக் ஸ்ரீவாஸ்தவா கூறுகையில், ‘கடந்த நான்கு மாதங்களாக நாம் காணும் நிலைமை, சீனத் தரப்பு ஒருதலைப்பட்சமாக மாற்றத்தை ஏற்படுத்த முயன்ற நடவடிக்கைகளின் நேரடி விளைவாகும் என்பது தெளிவாகிறது’ என்றார்.

    கடந்த ஜூன் மாதம் 15ம் தேதி கல்வான் பள்ளத்தாக்கல் நடந்த மோதலில் இந்தியா தனது 20 வீரர்களை இழந்தது. சீனாவும் உயிரிழப்புகளை சந்தித்தது. ஆனால் அந்த எண்ணிக்கையை சீனா வெளிப்படையாக தெரிவிக்கவில்லை. அதன்பின்னர் சமீபத்தில் எல்லையில் சீனப் படைகள் ஆத்திரமூட்டும் நடவடிக்கையில் ஈடுபட்டதால் பதற்றம் அதிகரித்திருப்பது குறிப்பிடத்தக்கது.
    Next Story
    ×