search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    உத்தவ் தாக்கரே
    X
    உத்தவ் தாக்கரே

    வழிபாட்டு தலங்களை திறப்பதில் அரசு எச்சரிக்கையுடன் செயல்படுகிறது: உத்தவ் தாக்கரே

    மாநிலத்தில் வழிபாட்டு தலங்களை திறப்பதில் அரசு எச்சரிக்கையுடன் செயல்படுகிறது என முதல்-மந்திரி உத்தவ் தாக்கரே கூறியுள்ளார்.
    மும்பை :

    மாநிலம் முழுவதும் வழிபாட்டு தலங்களை திறக்க பா.ஜனதாவினர் கடந்த வாரம் மணி அடிக்கும் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதே கோரிக்கையை எம்.ஐ.எம். கட்சி, பிரகாஷ் அம்பேத்கர் ஆகியோரும் வலியுறுத்தி உள்ளனர்.

    இந்தநிலையில் முதல்-மந்திரி உத்தவ் தாக்கரே நேற்று மேற்கு மராட்டியத்தில் நிலவும் கொரோனா பிரச்சினை குறித்து ஆய்வு செய்தார். அப்போது அவர் பேசியதாவது:-

    ஊரடங்கில் தளர்வு ஏற்படுத்துவதில் ஒருபகுதியாக, நாம் பல விஷயங்களை மீண்டும் தொடங்கி உள்ளோம். கோவில்கள் மற்றும் மற்ற வழிபாட்டு தலங்களை திறக்க கோரிக்கைகள் வருகின்றன. ஆனால் இந்த விஷயத்தில் அரசு எச்சரிக்கையுடன் செயல்படுகிறது. நாம் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    இதேபோல மழைக்கு பிந்தைய தற்போது உள்ள சூழல் மிகவும் சவால் நிறைந்ததாகவும், நவராத்திரி, தசரா போன்ற வர இருக்கும் பண்டிகை காலங்களில் நிர்வாகங்கள் பொது மக்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் எனவும் முதல்-மந்திரி கூறினார்.
    Next Story
    ×