search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    தேவகவுடா
    X
    தேவகவுடா

    மதசார்பற்ற ஜனதா தள நிர்வாகிகளுடன் தேவகவுடா காணொலியில் ஆலோசனை

    கிராம பஞ்சாயத்து தேர்தல் தொடர்பாக மதசார்பற்ற ஜனதா தள நிர்வாகிகளுடன் தேவகவுடா காணொலியில் ஆலோசனை நடத்தினார்.
    பெங்களூரு :

    மதசார்பற்ற ஜனதா தள கட்சியின் தேசிய தலைவரும், முன்னாள் பிரதமருமான தேவேகவுடா நேற்று பெங்களூருவில் இருந்தபடி காணொலி மூலம் மாவட்ட தலைவர்கள், எம்.எல்.ஏ.க்கள் மற்றும் கடந்த தேர்தலில் போட்டியிட்டு தோல்வி அடைந்தவர்களுடன் கிராம பஞ்சாயத்து தேர்தல் குறித்து ஆலோசனை நடத்தினார். இதில் முன்னாள் முதல்-மந்திரி குமாரசாமி உள்பட முக்கிய தலைவர்கள் கலந்து கொண்டனர். இந்த கூட்டத்தில் தேவேகவுடா பேசும்போது கூறியதாவது:-

    கர்நாடகத்தில் கிராம பஞ்சாயத்து அமைப்புகளின் பதவி காலம் நிறைவடைந்துவிட்டது. விரைவில் அவற்றுக்கு தேர்தல் நடைபெற உள்ளது. அந்த தேர்தலை எதிர்கொள்ள நமது கட்சி நிர்வாகிகள் தயாராக வேண்டும். கட்சியை அடிமட்டத்தில் இருந்து பலப்படுத்தும் பணிகளில் தீவிரமாக ஈடுபட வேண்டும். இந்த கிராம பஞ்சாயத்து இட ஒதுக்கீட்டை மாநில அரசு அரசியல் நோக்கத்துடன் வெளியிட்டுள்ளது. இதற்கு எதிராக போராட வேண்டியது அவசியம்.

    கர்நாடகத்தில் குறிப்பாக குடகு மற்றும் வட கர்நாடக பகுதிகளில் பலத்த மழை பெய்து மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். ஆனால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தேவையான நிவாரண உதவிகளை அரசு வழங்கவில்லை. அரசின் இந்த தோல்வியை மக்களிடம் எடுத்துக் கூற வேண்டும்.

    இவ்வாறு தேவேகவுடா கூறினார்.
    Next Story
    ×