search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    நிர்மலா சீதாராமன்
    X
    நிர்மலா சீதாராமன்

    வங்கிகளின் தலைவர்களுடன் நிர்மலா சீதாராமன் ஆலோசனை

    வங்கிகள் மற்றும் வங்கிசாரா நிதி நிறுவனங்களின் தலைவர்களுடன் நிர்மலா சீதாராமன் ஆலோசனை நடத்தினார்.
    புதுடெல்லி:


    வங்கிகள் மற்றும் வங்கிசாரா நிதி நிறுவனங்களின் தலைவர்களுடன் மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் நேற்று காணொலி காட்சி மூலம் ஆலோசனை நடத்தினார். கடன் தீர்வு திட்ட அமலாக்கத்தில் வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்களின் தயார்நிலை குறித்து விவாதிப்பதற்காக இந்த கூட்டம் நடந்தது.

    இதில், ஊரடங்கின்போது, பிரதமமந்திரி கரிப் கல்யாண் யோஜனா திட்டம் மற்றும் தற்சார்பு இந்தியா தொடர்பான நடவடிக்கைகளை திறம்பட அமல்படுத்தியதற்காக வங்கிகள் மற்றும் நிதிநிறுவனங்களின் தலைவர்களுக்கு நிர்மலா சீதாராமன் பாராட்டு தெரிவித்தார்.

    அவர் மேலும் கூறியதாவது:-

    கடன் தவணை தள்ளிவைப்பு சலுகை நீக்கப்படும்போது, கடன் பெறுபவர்களுக்கு வங்கிகள் ஆதரவுக்கரம் நீட்ட வேண்டும். கொரோனா தொடர்பான மனஅழுத்தம், எந்த வகையிலும் அவர்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தக்கூடாது.

    கம்பெனிகளின் தேவைகளையும், தனிநபர்களின் தேவைகளையும் பூர்த்தி செய்வதில் வங்கிகள் கவனம் செலுத்த வேண்டும். அவர்களின் வர்த்தகத்தை மறுகட்டுமானம் செய்வதற்கு உதவ வேண்டும்.

    கடன்பெற தகுதியானவர்களை அடையாளம் கண்டறிந்து, அவர்களை அணுக வேண்டும். பண்டிகை காலம் வருவதற்குள் அவர்களுக்கு கூடுமானவரை நிவாரணம் வழங்க வேண்டும்.

    வருகிற 15-ந் தேதிக்குள் கடன் தீர்வு திட்டத்தை செயல்படுத்த வேண்டும்.

    இவ்வாறு நிர்மலா சீதாராமன் கூறினார்.
    Next Story
    ×