search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    மந்திரி நாகேஷ்
    X
    மந்திரி நாகேஷ்

    கர்நாடகத்தில் ஆன்லைன் மூலம் மதுபானம் விற்கும் திட்டம் இல்லை: மந்திரி நாகேஷ் அறிவிப்பு

    கர்நாடகத்தில் ஆன்லைன் மூலம் மதுபானம் விற்கும் திட்டம் இல்லை என்று கலால் துறை மந்திரி நாகேஷ் கூறினார்.
    கோலார் தங்கவயல் :

    கர்நாடகத்தில் கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் விதமாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அதன்பேரில் மதுக்கடைகளும், மதுபான பார்களும் மூடப்பட்டன. இந்த நிலையில் அரசு உத்தரவின்பேரில் தற்போது மதுக்கடைகளும், மதுபான பார்களும் பல்வேறு கட்டுப்பாடுகளுடன் திறக்கப்பட்டுள்ளன. இதற்கிடையே ஆன்லைன் மூலம் மதுபானத்தை விற்க அரசு நடவடிக்கை எடுத்து வருவதாக தகவல்கள் வெளியாகின. இதுபற்றி மாறுபட்ட தகவல்களும் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி வந்தன.

    இந்த நிலையில் ஆன்லைனில் மதுபானம் விற்கப்படுவதாக பரவி வரும் தகவல் குறித்து கோலாரில் கலால் துறை மந்திரி நாகேஷ் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    கர்நாடகத்தில் ஆன்லைன் மூலம் மதுபானம் விற்பனை செய்யும் திட்டம் தற்போது இல்லை. பிற மாநிலங்களில் ஆன்லைனில் மது விற்பனை செய்யப்படுகிறதா? என ஆய்வு செய்யப்படும். அவ்வாறு பிற மாநிலங்களில் ஆன்லைனில் மதுபானம் விற்கப்பட்டால் அதனால் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு ஏதேனும் பாதிப்பு ஏற்பட்டுள்ளதா?, குடும்பங்களில் தொல்லை ஏற்பட்டுள்ளதா? என்பது குறித்தும் விசாரிக்கப்படும்.

    ஆன்லைன் மூலம் மது விற்பனை செய்யப்பட்டால் ஏற்படும் சாதக, பாதகங்கள் குறித்தும் ஆய்வு செய்யப்படும். அதன்பிறகே, முதல்-மந்திரி எடியூரப்பாவிடம் இது குறித்து விளக்கம் அளித்து அனுமதி கோரப்படும். மதுபான விற்பனையாளர்கள் ஆன்லைன் மூலம் மதுபானத்தை விற்பனை செய்ய வேண்டாமென கோரி மனு அளித்தனர். அதுகுறித்தும் பரிசீலனை செய்யப்படும்.

    இவ்வாறு அவர் கூறினார்.
    Next Story
    ×