search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பாபர் மசூதி
    X
    பாபர் மசூதி

    பாபர் மசூதி இடிப்பு வழக்கு விசாரணை முடிந்தது - விரைவில் தீர்ப்பு வெளியாக வாய்ப்பு

    பாபர் மசூதி இடிப்பு வழக்கின் விசாரணை அனைத்தும் முடிவடைந்த நிலையில் இந்த மாதத்துக்குள் தீர்ப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
    லக்னோ:

    உத்தரபிரதேசத்தின் அயோத்தியில் இருந்த பாபர் மசூதி கடந்த 1992-ம் ஆண்டு இடிக்கப்பட்டது. இந்த விவகாரத்தை விசாரித்த சி.பி.ஐ. அதிகாரிகள் பா.ஜனதா மூத்த தலைவர்களான எல்.கே.அத்வானி, முரளி மனோகர் ஜோ‌ஷி, உமாபாரதி, மாநில முன்னாள் முதல்-மந்திரி கல்யாண் சிங் உள்ளிட்டோர் மீது வழக்கு தொடர்ந்தது.

    இந்த வழக்கு லக்னோவில் உள்ள சிறப்பு கோர்ட்டில் நீதிபதி எஸ்.கே.யாதவ் முன் விசாரிக்கப்பட்டு வந்தது. பல ஆண்டுகளாக நடந்து வரும் இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட 32 பேரின் வாய்மொழி வாதங்களை நேற்று அவர்களது வக்கீல்கள் தாக்கல் செய்தனர். அத்துடன் இந்த வழக்கின் விசாரணை அனைத்தும் முடிவடைந்தது.

    இதைத்தொடர்ந்து இந்த வழக்கின் தீர்ப்பை நாளை (இன்று) முதல் எழுதப்போவதாக நீதிபதி அறிவித்தார். சுப்ரீம் கோர்ட்டின் உத்தரவுப்படி இந்த மாதத்துக்குள் இந்த வழக்கின் தீர்ப்பு வழங்கப்பட வேண்டும். எனவே இந்த மாதத்துக்குள் தீர்ப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    முன்னதாக அயோத்தியில் சர்ச்சைக்குரிய இடத்தில் ராமர் கோவில் கட்ட அனுமதி அளித்த சுப்ரீம் கோர்ட்டு, மசூதி கட்டுவதற்காக 5 ஏக்கர் நிலம் தனியாக வழங்கவும் உத்தரவிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.
    Next Story
    ×